2016 ம் ஆண்டில் தமிழ் சினிமாவை அதிர வைத்த பிரபலங்களின் விவாகரத்து ஒரு பார்வை..

Loading...
இந்த ஆண்டில் நடிகைகள் அமலா பால், திவ்யா உன்னி, ரம்பா ஆகியோர் கணவரை பிரிந்துள்ளனர்.

 2016ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் ஒரு பிளாஷ்பேக்.

 கோலிவுட்டில் இந்த ஆண்டு பல பிரபலங்களுக்கு திருமணம் நடந்துள்ளது. அதே போன்று சில பிரபலங்கள் பிரிந்துள்ளனர். 

முதலில் நடிகை அமலா பால் விவாகரத்து செய்தி திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது. 

திருமணமாகி இரண்டே ஆண்டில் அமலா தனியாகிவிட்டார்.

அமலா 
அமலா பாலும், இயக்குனர் ஏ.எல். விஜய்யும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினர்.

திவ்யா உன்னி 
நடிகை திவ்யா உன்னி டாக்டர் சுதீர் சேகரனை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலானார். இந்நிலையில் திருமணமாகி 14 ஆண்டுகள் கழித்து அவர் கணவரை பிரிந்துவிட்டார். 2 குழந்தைகளும் திவ்யாவுடன் உள்ளார்கள்.

ரம்பா 
ரம்பா தனது கணவரான கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதனை பிரிந்துவிட்டார். 2 மகள்களும் தன்னுடனேயே இருக்க அனுமதிக்குமாறு கூறி அவர் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது காதல் கணவர் அஸ்வினை பிரிந்து வாழ்கிறார். மகனை தன்னுடன் அழைத்து வந்துவிட்டார் சவுந்தர்யா.

கமல்-கவுதமி 
உலக நாயகன் கமல் ஹாஸனும், நடிகை கவுதமியும் திருமணம் செய்து கொள்ளாமலேயே 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தனர். இந்நிலையில் கவுதமி கமலை பிரிந்துவிட்டதாக அறிவித்தார்.

  –

Loading...
3651
-
Rates : 0