திருமணம் என்றாலே தெறித்து ஓடும் நடிகைகளா இவர்கள்?

Loading...

தமிழ் சினிமாவில் இன்று இருக்கும் நடிகைகள் பலர் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள்.

அப்போது பிரபலமான நடிகைகள் முதல் இப்போது கொடி கட்டிப்பறக்கும் நடிகைகள் வரை சிலர் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்கிறார்கள்.

சரி யார் அவர்கள் என்று கொஞ்சம் பின்னோக்கி செல்வோம்.

திரிஷா

நயன்தாராவுக்கு போட்டியாக வந்தவர் நடிகை திரிஷா. பெரிய அளவில் காதல் கிசுகிசுக்களில் சிக்கவில்லை என்றாலும் சில நாட்களுக்கு முன் தொழிலதிபரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

கல்யாணம் போல நடந்தாலும் சில காரணங்களால் திருமணம் நின்றுபோனது. 33 வயதான இவர் இப்போதெல்லாம் திருமணமே வேண்டாம், சினிமாவே போதும் என அடம் பிடிக்கிறாராம்.

சதா

ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அந்நேரத்தில் அதிகமாக பேசப்பட்டார். சில படங்களில் தொடர்ந்து நடித்தாலும் பின் படங்கள் இல்லாமல் பாலிவுட் பக்கம் சென்றார்.

வடிவேலுவுடன் எலி படத்தில் நடித்த இவருக்கு தற்போது வயது 32.

நமிதா

மச்சான்ஸ் நடிகையான இவர் முக்கிய ஹீரோயினாக சில படங்களில் நடித்தாலும் கவர்ச்சி நடிகை என்றே சொல்லபட்டார்.

மார்கெட் இல்லாமல் மலையாளம் போன இவர் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். 41 வயதான இவர் கல்யாணம் என்றால் அரசியலில் குதிக்கிறேன் என்று கிளம்பிவிட்டார்.

கௌசல்யா

நடிகர் முரளியுடன் காலமெல்லாம் காதல் வாழ்க, விஜயுடன் ப்ரியமுடன் ஆகிய படங்களில் நடித்தவர் இப்போது சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

31 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

தபு

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த இவர் 45 ஐ கடந்தாலும் இன்னும் கல்யாணம் செய்துகொள்ளவில்லை.

நக்மா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்திக் ஆகியோருடன் படங்களில் நடித்த இவருக்கு ஒரு நேரத்தில் கிரிக்கெட் வீரர் கங்குலி மீது காதல் என சொல்லப்பட்டது.

41 வயதை கடந்தாலும் அரசியல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஷோபனா

ஒரு நேரத்தில் சினிமாவில் மிக உச்சத்தில் இருந்த நடிகை ஷோபனா பழம்பெரும் நடிகை பத்மினியின் மகள் என்பது அனைவருக்கும் தெரியும்.

வீட்டில் எவ்வளவோ கெஞ்சிய பெற்றோர் ஷோபனா திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் கல்யாணம் என்ற வார்த்தையையே விட்டு விட்டார்களாம்.

45 வயதாகும் ஷோபனா நடனத்தை கையிலெடுத்து அதிலே நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

Loading...
1453
-
Rates : 0