உடலில் எவ்வித பயனும் இல்லாமல் இருக்கும் உறுப்புக்கள்

Loading...

உலகிலேயே மிகவும் கடினமான மற்றும் சக்தி வாய்ந்த இயந்திரம் எது என்றால் அது மனித உடல் தான்.

உடலில் உள்ள அனைத்து உறுப்புக்கள் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் இன்றுவரை யாரும் முழுமையாக தெரிந்துக்கொள்ளவில்லை என்பது மறுக்க முடியாது உண்மையாகும்.

இந்த கட்டுரையை நீங்கள் படிக்கும் இந்த வினாடியில் உங்களை உயிருடன் வைத்துக்கொள்ள உங்களது உடலில் ஆயிரக்கணக்கான செயல்கள் நிகழ்ந்து வருகின்றன.

உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒவ்வொரு இன்றியமையாத பணி இருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம்.

ஆனால், முன்னொரு காலத்தில் பயன்பாட்டில் இருந்து தற்போது எவ்வித பயனும் இல்லாமல் நமது உடலில் இருக்கும் சில உறுப்புகளை பற்றி இப்போது தெரிந்துக்கொள்வோம்.

Wisdom teeth (ஞானப் பற்கள்)

ஆங்கிலத்தில் விஸ்டம் டீத் எனப்படும் இந்த ஞானப்பற்கள் பொதுவாக 17 முதல் 25 வயதான பிறகு தான் வாயின் உட்புறத்தில் தோன்றும். உணவை மெல்ல இந்த பற்கள் எவ்வித உதவியும் செய்யாததால் இவற்றை நீக்க மருத்துவர்களின் உதவியை நாடுவது தற்போதும் நடந்து வருகிறது.

Extrinsic ear muscles (காது தசைகள்)

விலங்குகளில் பெரும்பாலானவைகள் தங்களது காது தசைகளை பயன்படுத்துகின்றன. அதாவது, காதுகளை இடது, வலதாக அசைக்க முடியும். இதனால் அவற்றிற்கு பலனும் உள்ளன. ஆனால், மனிதர்களின் காது தசைகளால் என்ன பயன்? நமது காதுகளை ஆட்டவும் அசைக்கவும் முடியாதே?

Tonsils (அடிநாச் சதைகள்)

உட்புற வாய் தசைகளின் இருபுறமும் இவை அமைந்துள்ளது. பொதுவாக நோய் எதிர்ப்பு சக்திக்கு இந்த உறுப்பு உதவுவதாக கூறப்பட்டாலும், இது நிரூபிக்கப்படவில்லை என்பதால் ஆண்டு தோறும் இந்த உறுப்பு மருத்துவர் உதவியுடன் நீக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஏனெனில், இவ்வுறுப்பு தொற்றுநோய்களை உண்டாக்குவதுடன், புற்றுநோயிற்கும் வழிவகுக்கும்.

The appendix (குடல்வால்)

மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான அப்பண்டெக்ஸ் எனப்படும் இந்த குடல்வால் வயிற்றில் மிக நீளமாக உள்ள குடலுடன் இணைந்து காணப்படும். ஆனால், இந்த குடல்வாலின் பயன்பாடு இன்றளவும் ஒரு புதிராகவே உள்ளது. சில மருத்துவர்கள் இது தேவையற்றது எனவும், சிலர் இது நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குவதாகவும் கூறி வருகின்றனர்.

எனினும், இதை நீக்கிவிட்ட பிறகு பெரும்பாலானவர்கள் மிகவும் ஆரோக்கியமாக செயல்படுவதாக ஆய்வுகள் வெளியாகியுள்ளன.

Darwin’s point (மேல் காது தசை)

உலகில் உள்ளவர்களில் சுமார் 10 சதவிகித மக்களுக்கு இந்த மேல் காது தசை உருவாகும். அதாவது, காதுக்கு மேல் ஒரு சிறிய கட்டியாக, புள்ளியாக இது வளர்ச்சி அடைந்திருக்கும். எனினும், இது எப்படி, எங்கிருந்து வருகிறது என்பதை இன்றளவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை.

Male Nipples (ஆண் மார்பக காம்புகள்)

குழந்தைகளுக்கு பாலூட்ட பெண்களுக்கு மார்பக காம்புகள் உள்ளன. ஆனால், ஆண்களுக்கு ஏன் மார்பக காம்புகள் உள்ளன? ஆதிவாசிகளாக திரிந்த ஆண்களுக்கும் இது பயன்பட்டிருக்காது. எனினும், கருவில் உதயமாகும் ஒவ்வொரு குழந்தைக்கும் இது இயற்கையாகவே தோன்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Plica Semilunaris (கண் ஓரத்தில் இருக்கும் திரை)

நமது கண்கள் ஓரமாக பிங்க் நிறத்தில் சிறிய திரை போல் உள்ள தசையை தான் இவ்வாறு அழைக்கிறோம். இத்திரையால் நமது கண்களுக்கு பார்வை திறன் அதிகரிக்காது. ஆனாலும், கண்ணீர் வரும்போது அதனை வற்ற வைக்க இத்திரை உதவுவதாக கூறப்படுகிறது. எனினும், இது முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.

The coccyx (வால் எலும்பு)

நமது முதுகு தண்டு எலும்பும் பின்புற தசைகளும் இணையும் இடத்தில் சிறிய எலும்புக்கட்டியாக இந்த வால் எலும்பு அமைந்துள்ளது. குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்பதற்கு இந்த வால் எலும்பும் ஓர் உதாரணம். ஒருக்காலத்தில் கீழே அமரும்போது சம அளவிலான வலுவை பெற இந்த எலும்பு பயன்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இப்போது இதன் பயன்பாடு தேவையாற்றதாக மாறியுள்ளது.

Gallbladder (பித்தப்பை)

நமது மார்பகத்திற்கு அருகில் உள்ள கல்லீரலுக்கு கீழ் இந்த உறுப்பு அமைந்துள்ளது. இந்த உறுப்பால் உடலுக்கு எவ்வித பயனும் இல்லை. ஆனால், புற்றுநோய், நெஞ்செரிச்சல் உள்ளிட்டவைகள் உருவாக இது காரணமாக அமைகிறது.

Loading...
1403
-
100%
Rates : 1