“ட்ரெண்டான அலங்காரம்” தேவதையாய் ஜொலிக்கும் மணப்பெண்ணே!

Loading...

திருமணத்தில் மணப்பெண்களுக்கு மலர்களைக் கொண்டு அவர்களுடைய ஜடைகளில், பூ அலங்காரம் செய்வது மிகவும் பேஷனாகவும் இன்றும் வழக்கமாகவும் இருந்து வருகிறது.

சமீப காலமாக ‘பிளவர் வேனி(Flower Veni)’ என்கின்ற பூ ஜடை அலங்காரம் ட்ரெண்டாக இருக்கிறது.

தலையில் சூடும் மலர்களைத் தவிர்த்து, மலர் செண்டுகளாக பயன்படுத்தும் ஐடியா தான் இன்று மணப்பெண் அலங்காரத்திற்கு சிறப்பாக திகழ்கிறது.

ஜெர்பரான் என்னும் மலரில் எண்ணற்ற வண்ணங்கள் இருப்பதால், இதனை தங்களின் ஆடைகளுக்கு ஏற்றார் போல நிறங்களை தேர்வு செய்து தங்களின் கூந்தலில் சூடிக் கொள்ள முடிகிறது.

இது போன்று அலங்காரம் செய்வதில் பலவகையான சிறப்பு மிக்க மலர்கள் உள்ளன. அவற்றில் நந்தியாவட்டை மலரும் ஒன்றாக உள்ளது.

நந்தியாவட்டை மலரின் சிறப்புகள்

நந்தியாவட்டை என்னும் மலர்களில் நமக்கு தேவையான நிறங்களுக்கு ஏற்ப ஸ்ப்ரே செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

நந்தியாவட்டை மலர்களை,செடியில் இருக்கும் போது மொட்டாக பறித்து விட்டால், அந்த மலர் காயும் வரை மொட்டாகவே இருக்கும்.

இதனால் நந்தியாவட்டை, பூ அலங்காரத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. நெட் ஜடை பின்னும் போது நந்தியாவட்டை மலர்கள் மிகவும் ஏற்றதாக உள்ளது.

மேலும் இந்த மலர்களை மட்டும் கொண்டு தான் நெட் ஜடை பின்ன முடியும் என்பதில் மிகவும் தனிச்சிறப்பு மிக்கதாக விளங்குகிறது.

முகூர்த்தம் மற்றும் வரவேற்பு, போன்ற நிகழ்ச்சிகளில் இந்த மலர்களைக் கொண்டு வேறு வேறு மாதிரியான டிஸைன்களில் அலங்காரம் செய்து கொள்ளலாம்.

ஆடைகளின் நிறம் மற்றும் ஆடைகளுக்கு ஏற்றது போல இந்த பூக்களில் பலவிதமான டிஸைன்களை செய்து கொள்ளலாம்.

இந்த பூக்களில் உள்ள கலைநயங்களே நவீன திருமணங்களின் அலங்காரமாக விளங்கி வருகின்றது.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Loading...
1157
-
Rates : 0