என் படத்தை பார்க்காதீர்கள் : ரசிகர்கள் மீது கவர்ச்சி நடிகை பாய்ச்சல்

Loading...

ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் இந்தியில் கவர்ச்சி படங்களில் நடிக்கிறார். தமிழிலும் வடகறி படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடினார். சன்னி லியோனால் இந்திய கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது என்று அவர் மீது பாலிவுட் ஹீரோயின்கள் பலர் தொடக்க நாட்களில் விமர்சித்தனர். தற்போது இணைய தளங்களில் பலர் சன்னியை விமர்சித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதில் கோபம் அடைந்த சன்னி லியோன் திடீரென்று விமர்சகர்கள் மீது பாய்ந்திருக்கிறார்.

‘நான் நடிக்கும் படத்தையோ, அல்லது எனது புகைப்படத்தையோ பாருங்கள் என்று நான் ஒருபோதும் யாரையும் வற்புறுத்தியதில்லை. உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் இணைய தளங்களில் என்னுடைய படங்களையும், போட்டோவையும் பார்ப்பதை நிறுத்திவிடுங்கள். ஆனால் ஒன்று, கூகுள் இணைய தளத்தில் அதிகபட்சமாக தேடிப்பார்க்கப் பட்ட செலிபிரிட்டி பட்டியலில் முதலிடம் எனக்குத்தான் கிடைத்திருக்கிறது. அதை மறந்துவிட வேண்டாம்.

அதனால் மற்றவர்களுக்கு என்னை விமர்சிக்க என்ன உரிமை இருக்கிறது. அவர்களுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது. ஆபாச படங்களில் நடிப்பதற்கு மதம், பாலின வேறுபாடு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. பாலிவுட்டில் உள்ள ஸ்டார்களைவிட, ஆபாச படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் என்னிடம் பெருந்தன்மையோடு நடந்து கொள்கிறார்கள். அந்த பெருந்தன்மையை வேறு யாரிடமும் பார்க்க முடியவில்லை. இவ்வாறு சன்னி லியோன் சீறிப்பாய்ந்துள்ளார்.

Loading...
1513
-
Rates : 0