உதயமாகும் அம்மா திமுக: ஜெ.தீபா பேரவை தொடக்கம்! அதிமுக உடைந்தது?

Loading...

625.250.560.350.160.300.053.800.450.160.90

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலா அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்பதை பிடிக்காத சில அதிமுகவினர் ‘அம்மா திமுக’ என்ற புதிய கட்சியை உருவாக்க முடிவெடுத்துள்ளனர்.

தமிழக முதல்வர் கடந்த 5 ஆம் திகதி மரணமடைந்ததையடுத்து அதிமுக கட்சியில் அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் இடம் வெற்றிடமானது.

இந்நிலையில், ஜெ.வின் தோழியான சசிகலா பொதுச் செயலாளர் பொறுப்பினை ஏற்க வேண்டும் என அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்காக சசிகலாவை ஆதரித்து பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

ஆனால், சசிகலாவை எதிர்ப்பவர்கள் அந்த போஸ்டர்களை கிழித்து எறிவதும், அதற்கு பதிலாக ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டுவதுமாக உள்ளனர்.

இதுமட்டுமல்லாது, சென்னையில் அதிமுக கொடியில் அண்ணா படத்துடன் ஜெயலலிதா, தீபா படத்தை இணைத்து கொடியை ஏற்றி இனிப்பு வழங்கியுள்ளனர்.

மேலும், இந்த நிலையில் சேலத்தில் ஜெ. தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது. சேலத்தில் 44வது வார்டு அதிமுக நிர்வாகிகள் தொடங்கினர். ஜெ.தீபாவை அதிமுகவிற்கு தலைமையேற்க அழைப்பு விடுத்து இந்த பேரவை தொடங்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிக்காத அதிமுக தொண்டர்கள் சிலரை வைத்து வரும் 24-ஆம் திகதி தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இளைய சகோதரர் இனியன் சம்பத் அம்மா திமுக என்ற இந்த கட்சியை எம்ஜிஆர் சமாதியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட நாளை பத்திரிக்கையாளர்களை அவர் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Loading...
4819
-
Rates : 0