ஒரு கணவனுக்கு 15 நாட்கள்..11 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பலே பெண்: அதிரவைக்கும் வாக்குமூலம்!

Loading...

மத்தியபிரதேசத்தில் 11 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் லெனின்ஜிதேந்திரா, இவர் எர்ணாகுளம் பொலிஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்த மேகாபார்கவி ( 27) என்ற பெண் தன்னை திருமணம் செய்ததாகவும், சில நாட்கள் கழித்து தன்னிடம் இருந்த 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் 25 பவுன் நகைகள் எடுத்துச் சென்று மாயமாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்துகையில், அவர் மத்திய பிரதசே மாநிலம் நொய்டாவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் அவர் அளித்த வாக்குமூலம் தான் திடுக்கிடும் வகையில் இருந்துள்ளன.

அவர் கூறுகையில், வசதியான ஆண்களை தொடர்பு கொண்டு, திருமணம் செய்து கொள்வதாக வசியப்படுத்தியதாக கூறியுள்ளார்.

குறிப்பாக பணக்கார குடும்பத்தில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட இளைஞர் தான் இவருடைய இலக்காக கூறப்படுகிறது.

அப்போது தான் எளிதாக மோசடி செய்யலாம் என்று எண்ணியுள்ளார். ஒவ்வொரு ஆண்களுடன் திருமணம் முடிந்த பிறகு 15 நாட்கள் தான் அவர்களுடன் உல்லாசமாக இருப்பாராம்.

அதன் பின்னர் அவர்கள் வீட்டில் உள்ள பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு தன் உறவினர்களுக்கு உடல் நிலை சரியில்லை சென்று விட்டு வருகிறேன் என்று கூறிச் செல்வாராம். அதன் பின்னர் வீடு திரும்பவே மாட்டேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தை சோந்த ராஜேஷ் கோலேஜா என்பரிடம் ரூ.90 லட்சமும், குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த ஹேமந்த்குமார் என்பவரிடம் ரூ.13 லட்சமும், ராஜஸ்தான் மாநிலம் ஜோட்பூர் பகுதியை சேர்ந்த சஜேந்திரராஷ் என்பவரிடம் ரூ.15 லட்சமும், சூரத் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவரிடம் ரூ.10 லட்சமும் மோசடி செய்துள்ளார்.

இதுபோல 11க்கும் மேற்பட்ட ஆண்களை அவர் திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மோசடிக்கு அவளது அக்கா பிராச்சிபார்கவி, உறவினர் தேலேஷ்சர்மா ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர் என கூறப்படுகிறது.

Loading...
3755
-
Rates : 0