ஃபேஷன் ஜுவல்லரி

Loading...

குந்தன் செட் ஃபேஷன் நகைகளை எப்படி கோர்ப்பது என்று இந்த வாரம் கற்றுக்கொள்ளப் போகிறோம். இதற்கு தேவையான பொருட்கள் கிராஃப்ட் பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். பெரிய கடைகள் என்றால் வெரைட்டியான டிசைன்கள் விற்பார்கள்.

என்னென்ன தேவை?
குந்தன் செட், (கோர்க்கப்படாத குந்தன் மோடிஃப்கள், தோடு அடங்கிய செட்), கம்பிகள், பேசர் பீட்கள், இணைப்பான்கள் போன்றவை

DSCN0895

DSCN0897

படத்தில் காட்டியுள்ளபடி குந்தன் மோடிஃப்க்குள் கம்பிகளை விட்டு இழுங்கள். இது நடுவில் வரும் என்பதால் இதனுடன் தொங்கட்டானையும் சேர்த்து கோர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்த மோடிஃபை இப்படியே கம்பிக்குள் கோர்த்துக் கொள்ளுங்கள்.

DSCN0899

முதல் கம்பியின் நீளத்திலேயே இன்னொரு கம்பியை எடுத்துக்கொள்ளுங்கள். கம்பியை  இரண்டாவது மோடிஃப்புக்குள் விடுங்கள். இப்போது படத்தில் காட்டியுள்ளதுபோல் இரண்டு பக்கமும் இரண்டு கம்பிகள் வந்திருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் இந்த இரண்டு கம்பிகளுக்குள் மோடிஃப்களை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக கோர்த்துக் கொள்ளுங்கள். இரண்டு பக்கமும் கோர்த்த பிறகு,

DSCN0908

இறுதியாக, கம்பியின் ஒரு முனையில் இரண்டு பீட் ஸ்பேசர்களைக் கோர்த்துக்கொண்டு, அதிலேயே ஹூக் அண்ட் ஐ இணைப்பானின் ஒரு முனையைக் கோர்த்துக் கொள்ளுங்கள். கோர்த்த முனையை வளைத்து பீட் ஸ்பேசர்களுக்குள் விட்டு நெருக்கமாக இணையுங்கள்.

DSCN0921

Loading...
1475
-
Rates : 0