பெண்ணுடன் உறவு வைத்த முன்னாள் அமைச்சர்: வீடியோ வெளியானதில் பல திடுக்கிடும் தகவல்கள்

Loading...

கர்நாடக முன்னாள் அமைச்சர் எச்.ஒய்.மேட்டி தொடர்பான ஆபாச வீடியோ வெளியான பின்னணியில் பெண் அரசியல்வாதி ஒருவர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

கலால்துறை முன்னாள் அமைச்சர் எச்.ஒய்.மேட்டி (71 வயது) பணியிடமாற்றம் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடர்ந்து அந்த பெண்ணிடம் அவர் உடலுறவு கொள்ளும் காட்சி கன்னட தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து முதல்வர் சித்தராமையாவை சந்தித்த மேட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் அமைச்சர் வீட்டில் கமெராவை வைத்து ஆபாச வீடியோ எடுத்து வெளியிட்டதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரின் பாதுகாவலர் ஒருவர் மூலமே அவரது வீட்டில் கமெரா பொருத்தப்பட்டுள்ளது என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பெண் அரசியல்வாதி, முன்னாள் காவல்துறை பெண் அதிகாரி, தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் என மூன்று பேருக்கு இதில் தொடர்பு இருப்பதாக சிஐடி பொலிசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சரை அச்சுறுத்தி காரியம் சாதிக்கவே இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும், பின்னர் ஏன் பொது வெளியில் அந்த வீடியோ வெளியிடப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை.

இறுதிகட்டத்தில் உள்ள இந்த விசாரணையை விரைவில் முடித்து விட்டு, அரசிடம் பொலிசார் அறிக்கை தாக்கல் செய்த பிறகே முழுவிவரம் தெரியவரலாம்.

 

வீடியோவை காண கீழ் உள்ள புகைப்பட இணைப்பை கிளிக் செய்யவும்

Loading...
904
-
Rates : 0