மனைவியின் புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய முகமது சமி

Loading...

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி தனது மனைவியுடன் பேஸ்புக்கில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நேற்று முன்தினம் முகமது சமி தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த புகைப்படத்தில் அவரது மனைவி ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்திருந்தார். இந்த புகைப்படத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இஸ்லாமிய மதக்கொள்கைப்படி மனைவியின் புகைப்படத்தை இது போல பொதுவெளியில் வெளியிடுவது தவறு என்று சில மதவாத இணையவாசிகள் சர்ச்சையை உருவாக்கினர்.

அதே சமயம் ஏராளமானவர்கள் சமி மற்றும் அவரது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Loading...
3447
-
100%
Rates : 1