சாரதியின் காமப்பிடியில் சிக்கிய பிரபல நடிகை… பரபரப்பை ஏற்படுத்திய பேட்டி –

Loading...

ண்டேன், மாப்பிள்ளை விநாயகர், பிரியமுடன் பிரியா போன்ற படங்களில் நடித்திருப்பதுடன் பல்வேறு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் ரேஷ்மி கவுதம். தமிழ், தெலுங்கில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இவரை சாரதியொருவர் ஒருமுறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி ரேஷ்மி கூறியது: எனக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவம்பற்றி வெளிப்படுத்தாமல் இருந்து வந்தேன். நீண்ட நாட்களுக்கு முன்பு ஒருமுறை ஆந்திராவில் குர்னூல் பகுதியில் ஒரு காரில் ஏறி குறிப்பிட்ட இடத்துக்கு சென்றேன். இரவு நேரம் என்பதால் சற்று கண் அயர்ந்தேன்.

திடீரென்று கண் விழித்து பார்த்தபோது வழக்கமான பாதையிலிருந்து மாறி காட்டுப் பகுதியை நோக்கி கார் சென்றுக்கொண்டிருந்தது. எனக்கு அச்சமாகிவிட்டது. ஏன் இந்த பக்கம் செல்கிறீர்கள் என்று சாரதியிடம் கேட்டேன். அதற்கு அவர், இது குறுக்கு வழி இந்த பக்கம் சென்றால் சீக்கிரம் சென்றுவிடலாம் என்றார்.

திடீரென காரை நிறுத்தி என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவரிடம் நான் என் பலத்தையெல்லாம் சேர்த்து சண்டை போட்டேன். பிறகு அந்த காரிலிருந்து இறங்கி தப்பினேன் என்று கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Loading...
4855
-
Rates : 0