சிரிக்க வைத்த காமெடி நடிகை காந்திமதி அழுது இறந்து போன அவலம்!

Loading...

காமெடியில் கொடிகட்டி பறப்பவர்கள் ஏராளம். ஆச்சி மனோரமாவுடன் சினிமாவில் கலக்கி வந்தவர் காந்திமதி. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என அவர் நடிக்க இவரோ முத்துராமன், ஏ.வி.எம் ராஜன் ஆகியோருடன் நடித்துவந்தார்.

அந்த நேரத்தில் அறிமுகமான நடிகர் சுருளிராஜன் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் ஒரு ரியல் ஹீரோவாக திகழ்ந்தார், இருவரும் இணைந்து ஜோடியாக மாந்தோப்பு கிளியே படத்தில் நடிக்க படம் வெள்ளி விழா கண்டது.

பின் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், ராதிகா, அம்பிகா, ரேவதி, கவுண்டமணி, வடிவேலு, செந்தில் என பலருடன் நடித்தவர். மனோரமாவுக்கு இணையாக நடித்து புகழ் பெற்றவர்.

தொடர்ந்து பல படங்களில் காந்திமதி பிசியாக நடித்து பெயர், புகழ், செல்வாக்கு என கொடிகட்டிப்பறக்க வாழ்க்கை உச்சத்திற்கு சென்றது. பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 16 வயதினிலே படத்தில் காந்திமதி நடித்தார்.

தன் வாழ்வில் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியே உறவினரை மட்டுமே நம்பி வாழ்ந்தார். உறவினர் பிள்ளைகளையும் தத்தெடுத்து வளர்த்ததாகவும், பின்னாளில் அப்பிள்ளைகள் இவரை விட்டு விலகி சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

பின் வயது முதிர்வால் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டார். தமிழ் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இவருக்கு கலைமாமணி விருதை வழங்கி கவுரவித்தார்.

சம்பாதித்த பணம் அத்தனையையும் உறவினரிடம் கொடுத்துவிட்டு கடைசியில் தான் இருதய கோளாறு, புற்று நோயால் பார்க்க ஆளில்லாமல் வடபழனியில் உள்ள தனது வீட்டில் (09.09.2011) வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

Loading...
3472
-
100%
Rates : 1