ஜனவரி 2ஆம் திகதி தனது அரசியல் முடிவை அறிவிக்கிறார் தீபா!

Loading...

முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவையொட்டி அதிமுகவின் பொது செயலாளராக சசிகலா இன்று முறைப்படி பதவி ஏற்று கொண்டார்.

இதற்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் ஆதரவு அளித்தாலும், பல கீழ்மட்ட தொண்டர்களுக்கு இது பிடிக்கவில்லை என தெரிகிறது.

இதனிடையில் சென்னை தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டின் முன்னர் ஏராளமான அதிமுக ஆண் மற்றும் பெண் தொண்டர்கள் குவிந்தார்கள்.

அவர்கள் தீபாவுக்கு ஆதரவாகவும், அதிமுகவை அவர் தான் காப்பாற்ற வேண்டும் என கோஷமிட்டனர்.

அவர்கள் சத்தத்தை கேட்டு சிறிது நேரம் கழித்து வீட்டின் உள்ளிருந்து வெளியில் வந்த தீபா அனைவரும் அமைதியாக இருங்கள். ஜனவரி 2ஆம் திகதி என் முடிவை அறிவிக்கிறேன், அது நல்ல முடிவாக இருக்கும் என கூறினார்.

இதை கேட்ட அங்கிருந்த அதிமுகவின கைத்தட்டி அவர் சொன்னதை வரவேற்று பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

மன்னார்குடி கோஷ்டிகள் மீது பல குற்றசாட்டுகளை கூறிவரும் தீபா அரசியலில் நுழைவது சம்மந்தமாக முக்கிய அறிவிப்பை ஜனவரி 2ஆம் திகதி வெளியிடுவார் என எதிப்பார்க்கப்படுகிறது

Loading...
845
-
Rates : 0