முதல்வர் சசிகலாவின் முதல் கையெழுத்து…!? சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி, விடுதலை.

Loading...

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்ற சசிகலா, அடுத்து தமிழக முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி அதிமுகவில் கட்சி பொறுப்பையும், ஆட்சி பொறுப்பையும் சேர்த்தே தலைமை தாங்கினார்கள். அவர்களை போல சசிகலாவும் நினைப்பதாக தெரிய வருகிறது.

இந்நிலையில் இரண்டு பொறுப்புகளும் ஒருவரிடம் இருந்தால் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி செல்ல முடியும் என்று நிர்வாகிகள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

தற்போது முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம் தனது பதவியிலிருந்து விலகி, சசிகலா முதல்வராக பதவியேற்க இருப்பதாகவும் தெரிகிறது.

அவ்வாறு சசிகலா முதல்வராக பதவியேற்றபின் முதல் கையெழுத்தாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யும் கோப்பில் கையொப்பம் இடுவார் என்றும் கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டார். அவருக்கு பிறகு தலைமை வகித்த ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரின் நிலைப்பாட்டையே எடுத்து வந்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறையில் வாடுபவர்களை விடுவிக்க முன்னாள் முதல்வர் ஜெ.,முயற்சி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் 32 ஆண்டு கால தோழியான சசிகலாவும், முதல்வராக பொறுப்பேற்றவுடன் ராஜீவ் கொலை வழக்கில், கைதாகி ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி ஆகியோரை விடுதலை செய்வதற்கான கோப்பில் முதல் கையெழுத்திடுவார் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.??

Loading...
2764
-
Rates : 0