தனது கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நாயகி

Loading...

தமிழ், மலையாளம், பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நந்திதா தாஸ். தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், நீர்ப்பறவை ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.

இவர் சவுமியா சென் என்பவரை கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்து பின் ஏதோ பிரச்சனையால் 2007ல் விவாகரத்து செய்தார்.

அதன்பிறகு, மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் சுபோத் மஸ்காராவை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் விகான் என்ற ஆண் மகன் உள்ளான்.

இந்த நிலையில் நந்திதா தாசுக்கும், அவருடைய கணவர் சுபோத் மஸ்காராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Loading...
2492
-
Rates : 0