நடிகர் அஜித்தை சந்திக்க விரும்பும் புரூணை இளவரசி சாரா பிந்தி ஸாலெஹ்..!! அவரின் அழகு கவர்ந்ததாம்.

Loading...

princedanielswedenprincessvictoriaarrivexdokrc6vpdxl

தமிழ் சினிமா ரசிகர்களால்  ‘தல’ என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார். இவர் தன் ரசிகர் மன்றத்தை கலைத்த பின்பும், அவருக்கு ரசிகர்கள் குறையவில்லை. அவரின் படங்களில் பாக்ஸ் ஆபிசில் கோடிகளை வசூலிக்கிறது.
இந்நிலையில், உலக பணக்கார நாடுகளில் ஒன்றான புருனே நாட்டு இளவரசி அஜித்தை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். உலகிலேயே தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரான அரண்மனை புருனேவில்தான் உள்ளது. புருனே மன்னர்களும், இளவரசர்களும் ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள்.
கடந்த வாரம், அந்த அரண்மனையில் வெளிநாட்டு வைர முதலாளிகளுக்கு ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பல நாட்டை சேர்ந்த குத்து பாடல்கள் இசைக்கப்பட்டு எல்லோரும் நடனமாடினார்கள். அப்போது வேதாளம் படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா’ பாடல் இசைக்கப்பட்டது. அதைக் கேட்டு அனைவரும் உற்சாகமாக நடனமாடியுள்ளார்கள்.
அந்தப் பாடலை கேட்டு அசந்து போன புருனே இளவரசி, தனது மெய்க்காப்பாளர்களை அழைத்து, அந்த பாடல் பற்றிய விவரங்களை கேட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, அஜித்தின் விவரங்கள்,புகைப்படங்கள் மற்றும் அவர் நடித்த சினிமாக்கள் ஆகியவற்றை சேகரித்து அவரிடம் கொடுத்துள்ளனர்.
அதையெல்லாம் பார்த்து அசந்துபோன இளவரசி, என்ன அழகு.. என்ன கம்பீரம்..சிரிக்கும் போது மனதை அள்ளுகிறார்.. அவரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்று உருகினாராம்…
சமீபத்தில் கிரிக்கெட் வீரர் பிரெட்லீ, அஜித்தை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது புருனே நாட்டு இளவரசி கூறியுள்ளார்.
தமிழகம் மட்டுமில்லாமல், உலகில் உள்ள பலரையும் அஜித்குமார் தனது அழகு மற்றும் புகழ் மூலம் கவர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.கலக்குங்க தல…..

Loading...
4809
-
Rates : 0