முதிர்ந்த வயதில் இளமையாக திகழும் ரகசியத்தை உடைத்த நதியா

Loading...

actress2   தமிழ் சினிமாவில் 80 களில் அறிமுகமானவர் நடிகை நதியா. இவர் ரஜினி கமல் தொடங்கி பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். இந்நிலையில் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் தமிழ், மலையாளம் மொழிகளில் தற்போது நடித்து வருகிறார். இன்று இவர் ஹீரோயின் போல் மிக அழகாக பொறாமைப்படும் அளவுக்கு இருப்பது எப்படி என்று எல்லாரும் கேள்வி எழுப்பினர் அதற்கு சமீபத்தில் ஒரு பேட்டியில் நதியா கூறுகையில் ” அடிப்படையில் என் அப்பா அம்மாவும் வயதை தண்டி இளமையாக இருந்தவர்கள் , ஜெனிடிக்கலாக கிடைத்த வரம் என்பதால் என் வாழ்கை முறையில் சில விஷயங்களை கவனமாக பின்பற்றுகிறேன். உடலுக்குத் தேவைப்படும் ஓய்வை தவறாமல் கொடுத்துவிடுவேன். தினமும் காலை 6.30 மணிக்கு எழுவேன். இரவு 11 மணிக்கு உறங்கிவிடுவேன். பெரிய உணவுக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது. பிடித்த உணவை அளவோடு எடுத்துக் கொள்வேன். நிறையத் தண்ணீர் குடிப்பேன். நான் ஒரு நான் வெஜிடேரியன். மீன் விரும்பிச் சாப்பிடுவேன். அது சரும பளபளப்புக்கு கைகொடுக்கும். எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உடற்பயிற்சிக்கான நேரத்தை தவறாமல் ஒதுக்கிவிடுவேன். தினமும் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வேன் . அதே போல் மனதில் எந்த கெட்டஎண்ணத்தையும் வைத்துக்கொள்ள மாட்டேன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியை பின்பற்றுபவர் நான் என்று தெரிவித்தார்.

Loading...
12616
-
100%
Rates : 3