பிரபல பாடகி வைக்கோம் விஜயலட்சுமி திருமணம் நின்றுவிட்டது- அதிர்ச்சியில் திரையுலகினர்

Loading...

தன்னுடைய தனித்துவமான குரலால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் வைக்கோம் விஜயலட்சுமி. அண்மையில் இவருக்கும் சந்தோஷ் என்பவருக்கும் பெரியோர்கள் ஆசியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதோடு திருமணம் மார்ச் 29ம் தேதி என்றும் கூறியிருந்தனர்.

ஆனால் தற்போது இவர்களுடைய திருமணம் நின்றுவிட்டதாம். இதுகுறித்து விஜயலட்சுமியின் அப்பா கூறும்போது, ஆமாம் நாங்கள் திருமணத்தை நிறுத்திவிட்டோம் என்று கூறியுள்ளார்.

சந்தோஷ் திருமணத்திற்கு பிறகு விஜயலட்சுமி வீட்டில் இருப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது அப்படி இருக்க முடியாது என்றும், திருமணத்திற்கு பிறகு விஜய்லட்சுமி பாட கூடாது என்றும் கூறியிருக்கிறாராம்.

இதனாலேயே இவர்களது திருமணம் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.

Loading...
5481
-
Rates : 0