தனுசுக்கு டி.என்.ஏ சோதனை: நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Loading...

நடிகர் தனுஷுக்கு டி.என்.ஏ. சோதனை நடத்தக்கோரி மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கதிரேஷன், மீனாட்சி தம்பதியினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தன்னுடைய மகன்தான் தனுஷ் என்று கதிரேஷன், மீனாட்சி தம்பதியினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று நடிகர் தனுஷ் மற்றும் அவரது பெற்றோர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராகினர். இதனையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சான்றிதழ்களில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக கதிரேஷன், மீனாட்சி தம்பதியினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று  தனுஷுக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகின்றது. இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...
3508
-
Rates : 0