சினிமா மோகத்தால் சீரழிந்த பெண்..! மன்மதனின் ஆசை வார்த்தையால் வீழ்ந்தார்..

Loading...
எஸ்ஆர்எம் கல்லூரியில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யபட்டவர் மதன். இவர் திருப்பூரில் வர்ஷா என்ற பெண்ணின் வீட்டில் மறைந்திருந்த போது தான் கைது செய்யப்பட்டார். வர்ஷாவின் படுக்கையறையில் உள்ளபரணில் உள்ள ரகசிய அறையில் நைட்டி அணிந்து கொண்டு மறைந்திருந்த போது தான் மதனை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
மதனின் வலையில் வர்ஷா வீழ்ந்த சம்பவம் சுவாரஷ்யமானது. திருப்பூரில் மார்டன் டிரஸ் விரும்பும் பெண்களுக்கு எஸ்.ஏ.பி. தியேட்டர் அருகே உள்ள ‘வீஸ் பொட்டிக்’ என்ற ரெடிமேட் துணி கடையை தெரியாமல் இருக்காது. இது தான் வர்ஷா நடத்தி வரும் பொட்டிக். இந்த கடையில் நான்கைந்து பெண்கள் வேலை செய்கிறார்கள்.
செல்வ செழிப்பான தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்த பெண் வர்ஷா. இவர் தனது பள்ளிப் படிப்பை தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் முடித்தார். ஆடை வடிவமைப்பில் ஈடுபாடு கொண்ட வர்ஷாவுக்கு பின்னர் பே‌ஷன் டிசைனிங் பட்டப்படிப்பை முடித்தார்.
35 வயதாகும் வர்ஷாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, ஸ்ரீராம் (16), தருண் (7) என்ற இரு மகன்கள் உள்ளனர். காஸ்டியூம் டிசைனிங் தொழிலில் இறங்கிய வர்ஷா நடிகைகளுக்கு ஆடைகளை வடிவமைத்து கொடுத்தார். திரை உலக தொடர்பு ஏற்பட்டதும் கூடவே பிரச்சினையும் எழுந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் வர்ஷா விவாகரத்து பெற்றார்.
6 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த வர்ஷா தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். அவினாசியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தபோது அழகிய பெண்கள் பலர் வந்து போனதால் அவரை குடியிருப்பு வாசிகள் துரத்தினார்கள்.
அங்கிருந்து வெளியேறிய வர்ஷா கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பூண்டி அருகில் உள்ள ஜி.வி.கார்டன் பங்களா வீட்டுக்கு குடி வந்தார்.
கீழ்தளத்தில் ஒரு மிகப்பெரிய ஹால், இரண்டு படுக்கையறை, சமையல் அறை, மேல்தளத்தில் இரண்டு அறை, சுற்றிலும் தோட்டம் என பிரம்மாண்டமாக இருக்கும் இந்த வீட்டுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வாடகை கொடுத்து வருகிறார் வர்ஷா.
சினிமா துறையில் தொடர்பு ஏற்பட்ட போது தான் வர்ஷாவுக்கும் மதனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வர்ஷாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்துள்ளது. இதனால் பட தயாரிப்பாளரான மதனிடம் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். மதனும் வாய்ப்பு வாங்கி தருவதாக கூற, அவர்களிடையே நெருக்கம் அதிகரித்து, அவருக்கு தேவையானதை வர்ஷாவிடம் பெற்றுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பில் வசித்ததால் தான் பிரச்சினை வருகிறது என்பதால் இந்த தனி வீட்டை தேர்வு செய்துள்ளார் வர்ஷா . இந்த பகுதியில் மட்டும் சுமார் 15 பங்களா வீடுகள் உள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத இந்த பகுதி வர்ஷாவின் தனி வாழ்க்கைக்கு வசதியாக இருந்துள்ளது.
மதனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வர்ஷாவை சந்திக்க அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்றபோது, தான் பிரச்சினையில் சிக்கி இருப்பதாகவும், போலீஸ் மோப்பம் பிடித்து வடமாநிலங்களில் தேடி வந்ததையும் தெரிவித்து வர்ஷாவின் வீட்டில் தலைமறைவு வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார் மதன்.
பகல் நேரங்களில் வெளியே வராத மதன் ,இரவு 7 மணிக்கு மேல் வெளியே செல்வாராம். அவர் வெளியே சுற்றுவதற்காக விலை உயர்ந்த ஒரு மோட்டார் சைக்கிளையும் வாங்கி இருக்கிறார்கள். நள்ளிரவு ஆனவுடன் மதன் மீண்டும் வீடு திரும்புவாராம்.
வர்ஷா வீட்டில், மதன் தலைமறைவாக இருந்தபோது அவரிடம் இருக்கும் விலை உயர்ந்த 2 சொகுசு கார்களில் அடிக்கடி கோவைக்கும் சென்று வந்ததாக கூறப்படுகிறது.இதை நோட்டமிட்ட போது தான் மதன் தலைமறைவாக இருந்த இடம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
மதனை வீட்டுக்குள் மடக்கியதும் நடுங்கி போன வர்ஷா, கடந்த 3 நாட்களாக தனது கடையையும் திறக்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார். அவரது வீட்டின் முன்பு இன்று பத்திரிகையாளர்கள் பலர் கூடினர். ஆனால் வர்ஷா வெளியே தலைகாட்டவில்லை.
அப்போது அங்கு வந்த வர்ஷாவின் கார் ஓட்டுனர் ‘அக்கா வீட்டில தான் இருக்காங்க. என்ன விசயமா இங்க கூடி இருக்கீங்க?’ என்று அப்பாவித்தனமாக கேட்டு சென்றுள்ளார்.

Loading...
5013
-
Rates : 0