தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக 3 பேருக்கு கடிதம் எழுதிய நந்தினியின் கணவர்

Loading...
டி.வி. தொடர்களில் நடித்து பிரபலமானவர் நந்தினி. ‘வம்சம்’ படத்தில் அறிமுகமான இவர் பல படங்களில் நடித்தார். தொடர்ந்து டி.வி. தொடர் களில் நடித்து வருகிறார்.

வளசரவாக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (30). தியாகராயநகரில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தார். இங்கு உடற்பயிற்சி செய்வதற்கு வந்த நந்தினி, கார்த்திகேயன் இருவரிடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். கார்த்திகேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர். முதல் மனைவி இறந்துவிட்டார்.

ஆரம்பத்தில் நந்தினி, கார்த்திகேயன் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக தான் சென்றது. பின்னர் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்த நந்தினி அவருடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனால் மனம் உடைந்த கார்த்திகேயன் உடற்பயிற்சி கூடத்தை விற்றுவிட்டார். விருகம்பாக்கத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இறக்கும் போது கார்த்திகேயன் எழுதி வைத்துள்ள கடிதத்தில் தனது தற்கொலைக்கு காரணம் நந்தினியின் தந்தை தான் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் தனது சகோதரி ரம்யாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘அம்மாவை நீ பார்த்துக்கொள். இத்தனை நாள் பிணமாக வாழ்ந்தேன். இனிமேல் வாழ பிடிக்கவில்லை . என் கவுரவம், மரியாதை போய்விட்டது. என் இறுதி ஆசை, முதல் மனைவி வெண்ணிலாவை புதைத்த இடத்தின் அருகே என்னை புதைத்துவிடு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

போலீசுக்கு கார்த்தி கேயன் எழுதி இருக்கும் கடிதத்தில் ‘என் மரணத்துக்கு காரணம் என் மாமனார் ராஜேந்திரன் தான். அவர் பணத்துக்காக என்னையும் என் மனைவியையும் பிரித்து விட்டார். நான் மனைவியுடன் பேச முயற்சி செய்தேன். ஆனால் என்னை அவர் தடுத்து விட்டார். இதனால் நான் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கிறேன்.

என் மாமனாரிடம் எவ்வளவோ பேசியும் அவர் என் பேச்சை கேட்கவில்லை. எங்கள் இருவரிடமும் கருத்து வேறுபாடு ஏற்பட வைத்து என்னை பயங்கர மன உளைச்சல் அடைய செய்துவிட்டார்.நான் சாக முழுகாரணம் என் மாமனார் ராஜேந்திரன் தான்’ என்று கார்த்திக் கூறியுள்ளார். மனைவி நந்தினிக்கும் கார்த்திகேயன் ஒரு கடிதம் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.

கணவர் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டது குறித்து நந்தினி கூறியதாவது:-

நானும் கார்த்தி கேயனும் ஒருவருடம் காதலித்து திருமணம் செய்து கொண் டோம். அவர் என்னைவிட, என் பணத்தை தான் அதிகம் விரும்பினார். திருமணத்துக்கு பிறகு தான் அது எனக்கு தெரிந்தது. என்னுடைய நகைகளை அவருடைய வீட்டார் வாங்கி வைத்துக்கொண்டனர்.

அவருக்கு இன்னொரு பெண்ணுடனும் தொடர்பு இருந்திருக்கிறது. அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கில் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். இந்த வி‌ஷயத்தை எனது குடும்பத்தினரிடம் கூட சொல்லவில்லை. இது மட்டுமல்ல அவர், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.80 லட்சம் வரை மோசடி செய்து இருப்பதும் எனக்கு தெரிய வந்தது.

இது தொடர்பாக அவருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பணம் கொடுத்தவர்கள் அந்த பணத்தை திரும்ப தரும்படி வற்புறுத்தினார்கள். இதனால் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து எனது பெற்றோர் என்னை அவர்களுடைய வீட்டுக்கே அழைத்து சென்று விட்டனர்.

என்றாலும், கார்த்தி கேயனை மனதில் காதலித்துக் கொண்டுதான் இருந்தேன். அவரை விட்டுப்பிரிய மனம் இல்லை. இந்த பணப் பிரச்சினையை தீர்த்துவிட்டு வந்தால் நாம் சேர்ந்து வாழ லாம் என்று சொன்னேன். அம்மா வீட்டில் இருந்தாலும் அடிக்கடி அவரை சந்தித்து வந்தேன்.

பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி தருவதாகவும், தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருப்பதாகவும், மனம் நொந்த நிலையில் என்னிடம் கூறினார். அவருக்கு ஆறுதல் கூறினேன்.

அவ்வப்போது செலவுக்கு பணம் கொடுத்து வந்தேன். இந்த நிலையில்தான் திடீரென்று அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை. இவ்வாறு நந்தினி கூறினார்.

கார்த்திகேயன் தற்கொலை குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Loading...
2878
-
Rates : 0