என்னால் இந்த போதையில்லாமல் இருக்க முடியாது – லாரன்ஸ் பற்றி வெளிவராத தகவல்

Loading...

ராகவ லாரன்ஸ் மாஸ்டர் வெறும் நடிகராகவும் , நடன இயக்குனராகவும் இல்லமால் நல்ல உள்ளம் படைத்த மனிதருக்கு எடுத்து காட்டாக வாழ்கிறார்.

இவர் தனது அறக்கட்டளை மூலம் பல குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்றி வருகிறார்.அதுமட்டுமில்லாமல் பல குடும்பங்களை காப்பாற்றியுள்ளார். இன்று தமிழ் புத்தாண்டு முன்னீட்டு அவரது நடிப்பில் வெளியாகியுள்ள படமான சிவலிங்கா படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரபல தொலைக்காட்சிக்கு வருகை தந்தார்.

இந்த இனிய நாளில் புதிதாக விவசாயி குடும்பத்தை காப்பாற்ற “சொல்லாதே செய்” என்ற புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிகழிச்சியில் அவர் பேசுகையில் விவசாயி காப்பாற்ற வேண்டியது நமது கடமை, என்னை மாதிரி பல பேர் யோசித்து உதவி செய்தால் அது தான் எனது பெரிய சந்தோசம்.

உதவி செய்வது என்பது எனக்கு ஒரு போதை, கிட்டத்தட்ட 10 வருடமாக செய்கிறேன், அந்த போதை யை ஒரு வாரம் செய்ய முடியலைன்னா ஒரு மாதிரி கஷ்டமாக இருக்கும் என்று கூறினார்.

Loading...
2159
-
Rates : 0