சூர்யா என்னை பார்த்தாலே பயந்து ஓடுகிறார்! ஜோதிகா

Loading...

நடிகை ஜோதிகா நடித்துள்ள மகளிர் மட்டும் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய ஜோ சிவக்குமார் குடும்பத்தின் ஆண்களுக்கு முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

நான் நடிப்பதற்கு சப்போர்ட் செய்தார்கள். இந்த படத்தில் நடித்தது மிகவும் பிடித்திருந்தது. வீட்டிலிருந்து நான் கிளம்புப் போது சூர்யா வெளியே கார் வரைக்கும் வந்து டாட்டா சொல்லி அனுப்பிவைப்பார்.

அதே போல என் அப்பாவும் வாழ்த்திக்கொண்டே இருப்பார். சொல்லப்போனால் திருமணத்திற்கு பிறகு நான் சூர்யாவுக்கு ஒரே ஒருமுறை தான் தோசை சுட்டுக்கொடுத்தேன்.

ஏனோ தானோ தான். அது தோசை போல இல்லை. இப்போதெல்லாம் காஃபி போட்டு தரேன் என்று சொன்னால் சூர்யாவும் குழந்தைகளும் பயந்து ஓடுகிறார்கள்.

சூர்யா இல்லையெனில் நான் இங்கு இல்லை. அவருக்கு நன்றி என கூறினார்.

Loading...
4697
-
100%
Rates : 1