ஒரே மாதத்தில் 10 கிலோ உடல் எடையைக் குறைக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான பானம் இதோ!
தேவையான பொருட்கள்
சுடுநீர் – 1 கப்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
பட்டைத் தூள் – 1/4 டீஸ்பூன்
இஞ்சி பவுடர் – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை தோல் – 2 துண்டுகள்
தேன் – சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் கொதிக்கும் சுடுநீரில் தேனைத் தவிர, சீரகப்பொடி, பட்டைத் தூள், இஞ்சி பவுடர், எலுமிச்சை தோல் ஆகிய அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின் ஊறவைத்த அனைத்து பொருட்களின் சாறு முழுவதும் நீரில் நன்றாக இறங்கி, பானம் சற்று குளிர்ந்ததும், அதில் தேன் சேர்த்து கலந்து வடிகட்டினால், பானம் தயார்.
பருகும் முறை
இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
குறிப்பு
வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டுமெனில், தினமும் குறைந்தது 45 நிமிடம் உடற்பயிற்சி கூட செய்து வரலாம்.
–