அடுத்தடுத்து பிணமான இரு நடிகைகள்! அதிர்ச்சியில் திரையுலகம்!

Loading...

பாலிவுட்டில் பெரிய நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் வீட்டை விட்டு வெளியேறி மும்பைக்கு வரும் இளம்பெண்கள் ஏராளம். அதில் சிலர் ஜெயிக்கிறார்கள், சிலர் தோற்றுவிடுகிறார்கள். தோல்வியை தாங்க முடியாமல் சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

ஹர்திவாரை சேர்ந்த க்ரித்திகா சவுத்ரி பாலிவுட் படங்களில் நடிக்கும் ஆசையில் மும்பைக்கு வந்து தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். க்ரித்திகா கொலை செய்தியால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு மும்பையில் வாடகை வீட்டில் தங்கியிருந்த போஜ்புரி நடிகை அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ் தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளார்.

அஞ்சலி தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் அவரது அம்மாவோ இது தற்கொலை அல்ல என்கிறார்.ஒரே மாதத்தில் மும்பையில் இரண்டு நடிகைகள் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Loading...
111
-
Rates : 0