இடுப்பு, தொடை சதையை பிட்டாக்கலாம்: இதை செய்தால் போதும்

Loading...

நம் வாழ்வில் உணவுக் கட்டுப்பாடு, வாழ்வியல் மாற்றங்கள் ஆகியவற்றில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் நம்முடைய உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

அந்த வகையில் நாம் அன்றாடம் காலையில் சில கார்டியோ பயிற்சிகளை பின்பற்றி வந்தால், உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
மவுன்டெயின் க்ளைம்பர் (Mountain Climber)

இந்த பயிற்சியை செய்யும் போது, விரிப்பில் முட்டிப் போட்டு கொண்டு முழங்கை மற்றும் கால் விரல்களை ஊன்றி, தவழும் குழந்தையைப் போன்ற நிலையில் இருக்க வேண்டும்.

பின் உடலை நேராக வைத்துக் கொண்டு, வலது காலை மட்டும் பின்னோக்கிக் கொண்டு முழு உடலின் எடையை கை மற்றும் பாத விரல்கள் தாங்கும்படி இருக்க வேண்டும்.

இதே நிலையில் ஒரு நிமிடம் வரை இருந்து விட்டு, மீண்டும் பழைய நிலைக்கு வந்து, இதேபோல இடது காலுக்கும் செய்ய வேண்டும்.
நன்மைகள்

இடுப்பு மற்றும் தொடைப்பகுதி சதை குறையும்.

உடல் முழுவதும் வலுமை பெறும்.

முதுகு வலியைக் குறைக்கும்.

உடலின் சமநிலைத்தன்மை அதிகரிக்கும்.

ஹை நீ (High Knee)

இந்த பயிற்சியை செய்யும் போது, முதலில் விரிப்பில் நேராக நின்று கொண்டு கைகளை வீசி நடப்பது போன்று வைத்து, இடது காலை இடுப்பு வரை அல்லது இடுப்புக்கு மேல் முடிந்த வரை உயர்த்த வேண்டும். இதேபோல் வலது காலுக்கும் செய்ய வேண்டும்.
நன்மைகள்

இடுப்பு, தொடை மற்றும் முழங்கால் பகுதி தசைகள் வலுவடையும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.

கைகள் மற்றும் கால்களின் இயக்கம் சீராகும்.

Loading...
1280
-
Rates : 0