5 வழிகள்.. 30 நாட்கள் பின்பற்றினால் போதும்: தொடை கொழுப்பை குறைக்கலாம்

Loading...

உணவு முறை மாற்றத்தால் இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் கொழுப்புகள் அதிகமாக சேர்ந்து விடுகிறது.

இது போன்ற பிரச்னைகளை தடுக்க இந்த 5 வழிமுறைகளை 30 நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால் ஸ்லிம்மான உடலமைப்பை பெறலாம்.
வழிமுறை – 1

கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்காமல், சற்று குறைத்துக் கொண்டு பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் முழுதானியங்கள் மற்றும் முட்டை, மீன், பால் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வழிமுறை – 2

தினமும் 30-60 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி, ரன்னிங், சைக்ளிங், ஸ்கேட்டிங் மற்றும் நீண்ட தூர நடைப்பயணம் போன்ற பயிற்சியை செய்ய வேண்டும். இவை உடல் எடையை கட்டுக்குள் கொண்டு செல்லும்.

வழிமுறை – 3

ஸ்குவாடிங் (Squating) எனும் பயிற்சியை வாரம் 2-3 நாட்கள் செய்ய வேண்டும் எப்படியெனில், முதலில் விரிப்பில் நேராக நின்று கொண்டு கைகளை முன்புறமாக நீட்டி, பாதி அமர்ந்த நிலையில், 10 நொடிகள் நிற்க வேண்டும்.

வழிமுறை – 4

லஞ்சஸ் (Lunges) எனும் பயிற்சியை 30 நாள்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். எப்படியெனில், முதலில் விரிப்பில், நேராக நின்று முட்டிபோட்டு வலது காலை முன்புறமாக மடக்கியபடி வைத்து, முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். இதே நிலையில் 30 -40 விநாடிகள் நிற்க வேண்டும்.

வழிமுறை – 5

தினமும் நாம் 50 மாடி படிக்கட்டுகள் ஏறி, இறங்கி வர வேண்டும், இதனால் 1000 கலோரிகளைக் கரைத்து நம் உடலில் உள்ள கொழுப்பையும் எளிமையாக குறைக்கலாம்.

Loading...
1110
-
100%
Rates : 2