தனது 17 வயது மகளின் காதலனுடன் தலைமறைவான குடும்பப் பெண்

Loading...

625.500.560.350.1juiui60.300.053.800.900.160.90

மகளின் காதலனுடன் ஓடிய தாயொருவர் தலைமறைவாகியுள்ள சம்பவமொன்று அம்பலாந் தோட்டை பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாகியுள்ள பெண்ணின் மகள் பிரத்தியேக வகுப்பில் தனது வயதை ஒத்த ஆணொருவருடன் காதல் வயப்பட்டுள்ளார்.

இதனை அவர் வீட்டிலும் தெரிவித்துள்ளார். மகளின் காதல் விவகாரத்திற்கு பெற்றோர் எவ்வித எதிர்ப்புகளும் தெரிவிக்கவில்லை இதே வேளை யுவதியின் தாயுடனும் குறித்த இளைஞன் கள்ள உறவை பேணி வந்துள்ளான்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று யுவதி பிரத்தியேக வகுப்பு நிறைவடைந்த பின் தனது காதலன் வரும் வரை காத்திருந்துள்ளார். வெகு நேரமாகியும் தனது காதலன் வராத காரணத்தினால் அவர் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார்.

வீட்டிற்கு திரும்பிய யுவதி தனது தாயார் வீட்டில் இல்லாததையும் அவதானித்தார். பின்னர் 35 வயதான தனது தாய் 17 வயதான தனது காதலனுடன் ஓடிச் சென்றுள்ளதனை குறித்த யுவதி அறிந்து கொண்டார். இவ்வாறு மகளின் காதலனுடன் ஓடிச்சென்ற தாயார் வீட்டில் உள்ள பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Loading...
985
-
Rates : 0