பிக்பாஸ் போட்டியாளரை நடுவீதியில் தாக்கிய பெண்கள்! வைரலாகும் காணொளி

Loading...

சர்ச்சைகளுக்கு பெயர் போன சாமியார் ஸ்வாமி ஓம், டெல்லி ஜந்தர் மந்தரில் பெண்களினால் சரமாரியான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது இரண்டு நாட்களுக்கு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 யாத்ரீகர்கள் பலியாகினர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அமர்நாத்தில் யாத்ரீகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் உயிரிழந்த யாத்ரீகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது.

ஊர்வலம் நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் அதில் பங்கேற்ற சர்ச்சை சாமியார் சுவாமி ஓமை பெண்கள் சிலர் சரமாரியாக தாக்கினர்.

ஆனால் அவர்கள் தாக்கியதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை.

இவர் ஹிந்தி பிக்பாஸ் தொடரின் 10ஆவது சீசனின் போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
387
-
Rates : 0