உஷார் மக்களே! கடைகளில் விற்கப்படும் பிளாஸ்டிக் சர்க்கரை!

Loading...

1

பெங்களூரு : பிளாஸ்டிக் அரிசியை தொடர்ந்து கடைகளில் பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களாக ஆந்திரா, தெலுங்கானா, உத்தரகாண்ட் உள்பட சில மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஹைதராபாத்தில் சரூர்நகர் பகுதியில் வாடிக்கையாளர் ஒருவர் பிரியாணி கடையில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. தெலுங்கானாவில் மீர்பெட் பகுதியின் மளிகை கடையிலிருந்து வாடிக்கையாளர் வாங்கி வந்த அரிசி பிளாஸ்டிக் அரிசி என தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 
இந்த புகாரின் அடிப்படையில், சிவில் விநியோக துறை அதிகாரிகள் மீர்பெட் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது வாடிக்கையாளர் வாங்கிய மளிகை கடையில் இருந்த பிளாஸ்டிக் அரிசியின் மாதிரியினை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் ஆந்திராவில் பெரிய பெரிய மளிகை கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்பட்டு வருவதாக வதந்தி பரவியதையடுத்து மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள மளிகை கடைகளில் பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படி கலப்பட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.

Loading...
268
-
Rates : 0