திருடனுக்கே ஆப்படித்த இளம் பெண்! திருட்டில் ஓர் சுவாரஸ்யம்

Loading...

201707011731143456_They-did-not-run-for-2-yearsIts-been-12-years-old_SECVPF.gif

 

அமெரிக்காவில் இளம் பெண் ஒருவர் தனது திருடு போன சைக்கிளை, திருடனிடமிருந்து திருடியுள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜென்னி மோர்டோன் ஹம்ப்ரேஸ்(30).

இவர் அண்மையில் தனது சைக்கிள் திருடு போய்விட்டதாகவும், அதைப் பற்றி தகவல் அறிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதைக் கண்ட அவரின் நண்பர்கள், இதே போன்ற சைக்கிள் ஒன்று பேஸ்புக்கில் விற்பனைக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

அது தன்னுடைய சைக்கிள் தான் என்பதை அறிந்த ஜென்னி மோர்டோன் ஹம்ப்ரேஸ், சைக்கிளை வாங்கிக் கொள்வதாக கூறி, சைக்கிள் திருடிய நபரை குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.

அங்கு திருடன் வந்தவுடன் பொலிசாரிடம் பிடித்துக் கொடுத்து விடலாம் என்று எண்ணியுள்ளார். ஆனால் அது நடக்கவில்லை.

இதன் காரணமாக அவர் மீண்டும் அவரிடம் ஒரு வாடிக்கையாளர் போல் பேசி, சைக்கிளை வாங்கிக் கொள்வதாக கூறி, குறித்த இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.

அப்பகுதிக்கு வந்த ஜென்னி மோர்டோன் ஹம்ப்ரேஸ், அவனிடம் இந்த சைக்கிள் பற்றி பல சந்தேகங்களைக் கேட்பது போல் கேட்டுள்ளார். அதன் பின்னர் சைக்கிளை ஓட்டிப் பார்த்துக் கொள்வதாக கூறி, ஓட்டிப் பார்த்துள்ளார்.

சைக்கிளை ஓட்டிய அவர் இடையில் நிறுத்தாமல், வீட்டிற்கு சென்ற பின்னர் தான் நிறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், திருடப்பட்ட தன்னுடைய சைக்கிளில் இருந்த சிறு சிறு பிரச்சனைகள் சரி செய்யப்பட்டிருப்பதாகவும், இது விற்பனைக்காக செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

Loading...
149
-
Rates : 0