கலப்பு திருமணத்தின் மற்றொரு கோணம்..! படித்தால் பிடிக்கும்..!

Loading...

11e3512c-ecea-4506-91b4-7e3a777389ad-615x377-585x359

கலப்பு திருமணங்களுக்கு பல பெற்றோர்கள் இன்னும் ஒரு சில காரணங்களுக்காக எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் கலப்பு திருமணங்களால் தவறுகள் எதுவும் இல்லை. என்ன தான் கலப்பு திருமணங்கள் இரண்டு குடும்பங்களுக்கு இடையே சண்டையை உருவாக்கினாலும், அதில் பல நிறைகள் உள்ளன.

சமூகத்தின் கண்களை திறந்து வைப்பதாகவும், பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைத்து சாதியே இல்லாத ஒற்றுமை இந்தியாவை உருவாக்கவும் இந்த கலப்பு திருமணங்கள் உதவுகின்றன. இந்த கலப்பு திருமணங்களினால் உண்டாகும் நிறைகளை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் கலப்பு திருமணங்கள் குறைவு தான். பெரும்பாலான கலப்பு திருமணங்கள் கலப்பு திருமணங்களாக தான் உள்ளன. இந்த கலப்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளிடையே புரிதல் அதிகமாக உள்ளது.

அவர்கள் மற்றவர்களை காட்டிலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்கிறார்கள். கலப்புத் திருமணங்கள் செய்து கொள்வதால் பல பண்டிகைகளையும், விழாக்களையும் கொண்டாடலாம். பல்வேறு விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். திருமணத்தன்று கூட பல்வேறு சடங்குகள் இருக்கும்.

ஒரு ஆராய்ச்சியில், கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகள், ஒரே இனத்தில் திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகளை விட அறிவானவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

கலப்புத் திருமணம் செய்து கொண்ட பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை அனைத்து விஷயத்திலும் சிறப்பாக வளர்க்கிறார்களாம். அவர்கள் எதையும் தொலைநோக்கு பார்வையுடன் பார்க்கிறார்களாம். சமூகத்தில் தன் குழந்தை நன்றாக வர இவர்களது எண்ணங்களும் செயல்களும் பெரும் உதவியாக இருக்கிறது.

Loading...
151
-
Rates : 0