சிசேரியன் மூலம் பிறக்க வைக்கும் சிசுவுக்கு ஜாதகம் எழுவது சரியானதா.

Loading...

குழந்தைபிறந்த நேரத்தை வைத்து, ஜாதகத்தை எழுதுவார்கள். அதுவே சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதுவது சரியாக இருக்குமா?

அறுவைசிகிச்சைமூலம் குழந்தையை பிறக்க வைத்து விட்டு அவர்களின் எதிர்காலத்­திற்கான ஜாதகத்தை முன்னதாக கணிக்கின்றனர். இது சரியான பிறப்­பாக அமை­யாது.

ஏனெனில் இயற்­கையின் நிய­தியை மீறி மனி­தனால் செய்­யப்­படும் எந்தவொரு செயல்பாடுகளுமே சரியானது அல்ல என்று ஜோதிட சாஸ்திரங்கள் மற்றும் புராணங்கள் கூறுகிறது.

எனவே செயற்­கை­யாக நாம் தீர்­மா­னிக்­கும் ஒரு மனி­தனின் பிறப்­புக்கும் அதனை வைத்து செய்­யப்­ப­டு­ம் ஜாதகக் கணிப்­புக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பது உண்மையானது.

ஒரு குழந்­தை­யா­னது எப்­போது எந்­நாளில், எத்­தனை மணி, நிமிடம், விநாடிகளில் பிறக்க வேண்­டும் என்பது யாருக்கும் தெரி­யாது. அதேபோல் தான் ஒருவருடைய இறப்பு பற்றியும் நமக்கு தெரியாது.

பிறப்பு என்­பது அவ­ரவர் பூர்­வ­ஜென்ம வினை­க­ளுக்­கான சம்­பா­வனை. அதனை ஒவ்­வொரு கால கட்­டங்­க­ளிலும் இன்பம், துன்­ப­மா­க அனுபவித்தே தீர ­வேண்­டும் என்­பது ஒவ்வொருவரின் விதி­யாகும்.

எனவே அதனை நாம் நல்­ல­நேரம், கிர­க­நிலை பார்த்து, சிசேரியன் செய்து பூமியில் பிறக்க வைப்­பதன் மூலம் நம்மால் அவர்களின் வாழ்க்கையை மாற்­றி­ அ­மைத்து விட முடியாது என்று ஜோதிட மேதைகள் கூறியுள்ளனர்.

Loading...
763
-
Rates : 0