போலீசை கதறி அழ வைத்த ஒரு கள்ளக்காதல் கொலை

Loading...

மனைவியிடம் அடிக்கடி பேசி மனதை கெடுத்து இஷ்டப்படி ஆட்டுவித்து குடும்பத்தை சின்னாபின்னமாக்கிய இளநீர் வியாபாரியை வெட்டி கொலை செய்த பரிதாப கணவன் போலீசில் சரண் அடைந்தார்.

ஈரோடு மாவட்டம், பு.புளியம்பட்டி பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 55) இளநீர் வியாபாரி.

சண்முகம் தோட்டங்களுக்கு சென்று மொத்தமாக இளநீர் வாங்கி ஒவ்வொரு பகுதிக்கும் இருசக்கர வாகனத்தில் சென்று சாலையோரம் போட்டு விற்பனை செய்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் தனது இருசக்கர வாகனத்தில் இளநீர் வியாபாரம் செய்ய சென்ற சண்முகத்தை வழிமறித்த ஒருவன் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டான்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இளநீர் வியாபாரி சண்முகத்தை வெட்டி கொலை செய்த மூர்த்தி என்பவர் இக்கரைதத்தப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் முன் சரண் அடைந்தார்.

தான்தான் இளநீர் வியாபாரி சண்முகத்தை வெட்டி கொலை செய்தேன் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்தான் மூர்த்தி. இவரது மனைவி பெயர் சரஸ்வதி.

சரஸ்வதியிடம் இளநீர் வியாபாரி சண்முகம் அடிக்கடி பேசுவாராம். மேலும் செல்போனிலும் இருவரும் பேசிக் கொண்டிருப்பார்களாம்.

இதை கண்காணித்த மூர்த்திக்கு தன்மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் “எப்போது பார்த்தாலும் சண்முகம் வந்து விடுவான் கதவைப் பூட்டிக் கொள்ளவார்கள்.

மாலையில் தான் அந்த வியாபாரி செல்வான் என்று கூறியுள்ளனர். இதனால் சண்முகம் மீது கடும் ஆத்திரம் அடைந்தார்.

இதையொட்டி சம்பவத்தன்று வியாபாரத்துக்காகசென்ற சண்முகத்தை மூர்த்தி மறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட அந்த பரிதாப கணவன் கூறும்போது, “எங்களுக்குள்ள முன்னாடி சிறு சண்டை கூட வந்ததே இல்லைங்க..

எனக்கு தாய் மாதிரி கிடச்ச என் பொண்டாட்டியை மனசை மாத்தி கெடுத்துட்டான்ங்க என்று கதறி அழ, போலீசாரே கண் கலங்கி விட்டார்கள் என்கிறார்கள்.

சரண் அடைந்த மூர்த்தியை பவானிசாகர் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Loading...
1774
-
Rates : 0