என்னை பற்றி பேச கமலுக்கு உரிமை இல்லை… வெளியேறுகிறார் காயத்ரி ரகுராம் ?

Loading...

பிக்பாஸ் வீட்டில் இனியும் இருக்க தான் விரும்பவில்லை என்று நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து அறுவெறுக்கத்தக்க வார்த்தைகள் பயன்படுத்தி வரும் காயத்ரி ரகுராமை, நடிகர் கமல் நேற்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.

இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்து வெளியிடப்பட்டுள்ள பிரமோ வீடியோவில், இனியும் பிக்பாஸ் வீட்டில் இருக்க நான் விரும்பவில்லை என்று  காயத்ரி கூறுகிறார்.

மேலும் தனது தவறை திருத்தி கொள்ள மனமில்லாத காயத்ரி தன்னை திருத்தும் உரிமை தனது தாய்க்கு மட்டுமே உள்ளது என்று தனக்கு அட்வைஸ் செய்த கமலை மறைமுகமாக சாடியுள்ளார்

கமல் என்னிடம் கடந்த மூன்று வாரமாக நீ கெட்ட வார்த்த பேசுற, கெட்ட வார்த்த பேசுறன்னு சொல்றாரு. அவர் கேட்குற கேள்வியெல்லாம் என்னை Discourage பண்ற மாதிரி இருக்கு…! என்று கூறினார். இதனை கேட்ட நடிகை ரைசா அவர் என்னையும் தான் திட்டினார் எல்லோரையும் திட்டினார், என்று காயத்ரி ரகுராமை மரித்தார்.

ஆனால், காயத்ரி ரகுராம் நீ வேற நான் வேற..? உன்னோட என்னை ஒப்பிட்டு பேசாத..! நான் உன்னைபோல் கிடையாது என்று ரைசாவை ஆஃப் செய்தார்.

இதனை பார்த்த, Trigger Star ஷக்தி ஏன் இப்படி கடகடனு பேசுற. கொஞ்சம் பொறுமையா இரு என்று காயத்ரியிடம் கூறினார்.

என்னை சரி செய்ய என் அம்மாவுக்கு மட்டும் தான் உரிமை இருக்கு கமல் சார்க்கு என்ன உரிமை இருக்கு என்று கமல்ஹாசனை திட்டியுள்ளார்.

இது ரசிகர்களை மேலும் கடுப்பாக்கியுள்ளது.

Loading...
2554
-
0%
Rates : 1