வடக்கில் பதற்ற நிலை, கொழும்பில் நடிகை ஓவியாவிற்காக ஆர்ப்பாட்டம்

Loading...

இலங்கையை பொறுத்தவரை வடக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக பல்வேறுபட்ட பிரச்சனைகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

துப்பாக்கி சூடு, வாள்வெட்டு சம்பவங்கள் இதனைத்தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் குவிப்பு என்றெல்லாம் நாள்தோறும் பல கைதுகள், பிரச்சனைகளுடன் வடக்கு மக்கள் அல்லலுறுகின்றார்கள்.

காணி மீட்பு போராட்டம், காணாமல் போனோரை மீட்டுத்தருமாறு கோரும் போராட்டம், என்று வடக்கு போராட்டங்களால் நிறைந்து வழிகின்றது.

இந்நிலையில் தெற்கில் கொழும்பு மாவட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமாக பேசப்பட்டு வரும்; நடிகை ஓவியாவிற்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்ச்சி இடம்பெறும் தமிழ்நாட்டில் கூட இந்த விடயம் பற்றி பேசப்படாத நிலையில் இலங்கையில் கொழும்பு மாவட்டத்தில் குறித்த பேரணி இடம்பெற்றமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 
 

Loading...
999
-
Rates : 0