20 நாட்கள்.. 15 கிலோ எடையை குறைக்க சீரகத்தை இப்படி சாப்பிட வேண்டும்

Loading...
வாசனை மிகுந்த மசாலா பொருட்களில் ஒன்றான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
அதிலும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
ஆய்வு
தினமும் சீரகத்தை சாப்பிட்டு வருவதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டு, உடல் எடை குறைகிறது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் சீரகமானது மாரடைப்பைத் தடுத்து, ஞாபக சக்தி மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரித்து, ரத்த சோகை, செரிமானம் போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.
உடல் எடையை குறைக்க சீரகத்தை எப்படி சாப்பிட வேண்டும்?
  • 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து, அதை காலையில் தினமும் குடிக்க வேண்டும்.
  • சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
  • 1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
  • தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறையும்.
  • ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பல்வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்து, அதில் துருவிய இஞ்சி, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி ஆகியவற்றை சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் சாப்பிட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB-PAGEயை லைக்  செய்யவும்

Loading...
2528
-
94%
Rates : 18