ஓவியாவுக்கு பதிலாக புதிய பிரபலம்… களைகட்டுமா பிக்பாஸ்!

Loading...

கடந்த சில வாரங்களாக தமிழக மக்களை பெரிதும் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் களையிழந்து காணப்படுகிறது.

ஹீரோ மற்றும் வில்லன் இல்லாத திரைப்படம் போல ஓவியா மற்றும் ஜூலி இல்லாத பிக்பாஸ் ரசிகர்களால் ஒதுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஓவியா மற்றும் ஜூலியின் வெளியேற்றத்தை ஈடுகட்டும் வகையில் ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள பிக்பாஸ், வரும் ஓகஸ்ட் 15 சுதந்திர தினம் முதல் முக்கிய நட்சத்திரம் ஒருவரை அறிமுகப்படுத்தவுள்ளாராம்.

அவர் ஆணா, பெண்ணா என்ற சஸ்பென்ஸில் உள்ள நிலையில் பெண்ணாக இருக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் தற்போது ரைசா, காயத்ரி மற்றும் பிந்துமாதவி என மூன்று பெண்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த வாரம் காயத்ரி வெளியேற வாய்ப்பு இருப்பதால் அது இரண்டாக மாறும் நிலையும் உள்ளது.

இந்த நிலையில் புதியதாக வரும் நட்சத்திரம் யாராக இருக்கும், அவரால் பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் களைகட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 
 

Loading...
405
-
Rates : 0