பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் கணக்கு தனி கணக்கு..! இந்த வார திருப்பம்..?

Loading...

ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு சென்ற பிறகு மக்கள் அந்த நிகழ்ச்சி பார்ப்பதை தவிர்த்துவிட்டார்கள். இதனையடுத்து ஜுலி ரசிகர்களால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் ரசிகர்கள் அனைவரும் காயத்ரியைத்தான் குறிவைத்திருந்தனர். இதனால் இந்த வாரம் காயத்ரி நிச்சயம் செல்வார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் இன்று பிக்பாஸ் ஒவ்வொருவரிடம் கேள்விகள் கேட்டார்.

இதில் காயத்ரி அனைத்திற்கும் சரியாக பதில் சொன்னதாக கூறி அவரை எவிக்ஷனிலிருந்து காப்பாற்றிவிட்டார். காயத்ரிக்கு ஆதரவாக பிக்பாஸ் செயல்படுவதாக இருந்த குற்றச்சாட்டு தற்போது உறுதியாகியுள்ளது.

இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த கோபத்தில் உள்ளனர். ஆனால் இந்த வாரம் புதிதாக ஒரு பிரபல நடிகையை பிக் பாஸ் வீட்டிற்குள் கொண்டுவர திட்டம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஓவியா சென்ற பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மக்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.

மீண்டும் மக்கள் நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்றால் மக்களை கவரும் ஒரு நடிகை தேவை. அதற்காக தான் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். நிச்சயமாக இந்த வாரம் புதிய திருப்பத்தை கமல் கொடுப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.

 
 

Loading...
821
-
Rates : 0