கை மட்டும் வெயிலால கருப்பாயிடுச்சா? அதை சீக்கிரமாக போக்கும் வீட்டு வைத்தியங்கள்!

Loading...

பெரும்பாலும் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கைகளுக்கு கொடுப்பதில்லை. முகத்தில் சின்னப்பரு வந்தால் கூட அதனை போக்க என்னென்ன வைத்தியங்கள் இருக்கிறது என தேடிப் பார்த்திடும் நாம் கைகளில் வந்திருக்கும் டேன்,டார்க் பேட்சஸ் பற்றி யோசித்திருப்போமா? கைகளில் சன் டேன் இருந்தால் அதனை போக்கு சில எளிய டிப்ஸ் இதோ

உருளைக்கிழங்கு :
உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை தோல் நீக்கி,ஒன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதனை கைகளில் தடவி நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம். இது இயற்கையான ப்ளீச் வாரத்திற்கு ஒரு முறை என நான்கு வாரங்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரி : வெள்ளரியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் மூன்று டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து கைகளில் பூசுங்கள். இது சன் டேனை போக்குவதுடன் கைகளில் பொலிவை கொடுக்கும்.

கேப்ஸ்யூல் : விட்டமின் ஈ கேப்ஸ்யூல் சருமங்களில் உள்ள டார்க் ஸ்பாட்ஸ் மற்றும் பேட்ச்சை போக்குவதில் சிறந்தது. கேப்ஸ்யூலை கட் செய்து கருமை உள்ள இடங்களில் அப்படியே பூசிக்கொள்ளலாம். இரவு படுக்கும் போது போட்டுவிட்டு மறுநாள் காலையில் கழுவுங்கள்.

ஆலிவ் வேரா : உடல் நலத்திற்கும் சரும் நலத்திற்கும் உதவிடும் ஒரு செடி என்றால் இதனை சொல்லலாம். ஆலிவ் வேரா ஜெல்லை சருமத்தில் தினமும் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும். இதனை மாய்ஸரைசராகவும் பயன்படுத்தலாம்.

 

சர்க்கரை : இது மிகவும் எளிதானது. கைகளில் ஒரு கைப்பிடியளவை விட குறைந்த அளவு சர்க்கரையை எடுத்துக் கொண்டு கைகளில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். இரண்டு சொட்டு ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளலாம். இது ஸ்க்ரப் ஆக செயல்படும்.

பாதாம் : ஒரு கைப்பிடியளவு பாதாம்பருப்புகளை நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்குங்கள்.இத்துடன் தேவையான அளவு பால் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இந்த கலவையை வாரத்திற்கு இரண்டு முறை கைகளில் பூசி 15 நிமிடங்களில் கழுவி விடலாம்.

தேங்காய் எண்ணெய் : ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொள்ளுங்கள். இதில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை, இரண்டு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலக்குங்கள். வேண்டுமானால் இதில் ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவை ஒரு டப்பாவில் அடைத்து வைத்து விட்டு ஒரு வாரம் வரை தினமும் இதனை பயன்படுத்தலாம்.

ஆலிவ் ஆயில் : அரை கப் கல் உப்புடன் இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கைகளில் பூசிக்கொள்ளுங்கள் இந்த கலவை இரண்டு வாரங்கள் வரை கெடாது.

Loading...
1516
-
100%
Rates : 3