போலி சாமியார் ராம் ரஹீமின் கார்களும் ஒரிஜினல் அல்ல! #WhyInGodsName

Loading...

கோடிகளை வாரி இறைத்து வெளிநாட்டுக் கார்களை வாங்குவது, கரன்சியில் மிதக்கும் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு முடியாத காரியம் அல்ல. காராக இருந்தாலும் சரி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி, தன்னிடம் இருக்கும் ஒரு விஷயம் உலகத்தில் வேறு யாரிடமும் இருக்கக் கூடாது என்ற எண்ணம்கொண்டவர் குர்மீத் ராம். இவர், தன்னுடைய கார்களை வெளிநாட்டு ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையாக தானே டிசைன் செய்துகொள்வார். 

gurmeet

தன் கார் கனவுகளுக்கு வடிவம் கொடுக்க, ஹரியானா மாநிலம் சிர்ஸாவில் 800 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் தன் ஆசிரமத்தில் பெரிய பட்டறை ஒன்றை வைத்திருக்கிறார். பல பொறியாளர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் அவர் கார்களை டிசைன் செய்வதற்காகவே பிரத்யேகமாக வேலைக்கு அமர்த்தியிருக்கிறார். 

சீறிப்பாயும் ஸ்போர்ட்ஸ் கார்கள் தொடங்கி,  செடான், ப்ரீமியம் செடான், எக்ஸிக்கியூடிவ் செடான், லக்ஸூரி செடான்… என சிர்ஸாவில் இருக்கும் இவரது ஆசிரமத்தில் டிசைனர் கார்களுக்கு அளவே இல்லை. ரீமாடிஃபிகேஷன் செய்து நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இந்த கார்களை யார் பார்த்தாலும் `சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவுக்கு வந்துவிட்டோமோ!’ என்று ஒரு கணம் ஏமாந்துவிடுவார்கள். 

தன்னுடைய ஆசிரமத்தில் எத்தனையோ கார்கள் இருந்தாலும் குர்மீத் ராம் சிங் விரும்பி ஓட்டுவது `கடவுளின் ரதம்’ (Chariot of God) என அவர் பெயரிட்டிருக்கும் இந்தக் காரைத்தான். 

கார்

ஜெர்மானிய டிசைனர்களால் வடிவமைக்கப்பட்டு, கலைகளுக்குப் பெயர்பெற்ற பிரான்ஸ் நாட்டினர் உருவாக்கப்பட்ட புகாட்டி வேரான் (Bugatti Veyron) காரின் வெளித்தோற்றம், குர்மீத் ராமுக்குப் பிடித்தமான ஒன்று. ரேஸ் கார் பிரியர்களின் முதல் தேர்வான இந்த காருக்கு சவால்விடக்கூடிய வகையில் சொந்தமாக ஒரு காரை உருவாக்க நினைத்த குர்மீத் ராம், புத்தம் புது ஹோண்டா அக்கார்டு  V6  காரை வாங்கி, அதன் இன்ஜின், கியர் பாக்ஸ், சஸ்பென்ஷன் போன்ற விஷயங்களை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, தன் கார் பட்டறையில் அதைப் புதிய தோற்றம்கொண்ட  புகாட்டி வேரான் (Bugatti Veyron) காராக மாற்றிவிட்டார்.  காரில் அமர்ந்தபடியே இவர் ஆற்றும் சொற்பொழிவை பக்தகோடிகள் கேட்பதற்கு வசதியாக,  இதயத்தின் வடிவில் இருக்கும் கார் கிரிலின் மத்தியில் ஒரு சின்ன ஒலிபெருக்கியும் பொருத்தியிருக்கிறார்.

“காரின் கிரில்லை ஏன் இதய வடிவில் வடிவமைத்தீர்கள்?” என்று கேட்டால், “இறைவன் அன்பு மயமானவன் அல்லவா!” என்றார். 

gurmeet

`இத்தாலி நாட்டின் பியாஜியோ MP3  ஸ்கூட்டரைப்போல இருக்க வேண்டும். அதேசமயம் தன்னுடைய முத்திரையுடன் இருக்க வேண்டும்’ என்ற எண்ணத்தில் குர்மீத் ராம் புத்தம் புதிய கரிஷ்மா பைக்கை வாங்கி அதை பியாஜியோவாக மாற்ற,  அது செம டாக் ஆஃப் தி பஞ்சாப் ஆனது. காரணம், இது தயாரிக்கப்பட்டதற்கான காரணம் அப்படி!

இதற்கு `Agro Jetter’ ‘எனப் பெயர்வைத்தார். விவசாயப் பணிகளுக்குப் பயன்படும் வாகனம்தான் ஆக்ரோ ஜெட்டர். இது பைக்காகவும் இருக்காது; முழு காராகவும் இருக்காது. ஆனால், காரைப்போல் சீட்டிங் பொசிஷன்கொண்டிருக்கும். இங்கே குர்மீத் சாமியாரின் கொள்கைப்படி (!)  இந்த வாகனம், மருத்துவமனை இல்லாத ஏரியாக்களுக்கு மருத்துவர்களை பிக்கப் செய்வது, மருந்துகளை சப்ளை செய்வது என, நடமாடும் மருத்துவமனையாகச் செயல்படுவதற்காகத் தயாரிக்கப்பட்டதாம்.

gurmeet

இவை தவிர, தெருவுக்குத் தெரு நாம் பார்க்கும் சான்ட்ரோ  தொடங்கி அமெரிக்காவின் விலை உயர்ந்த ஹம்மர் கார் வரை இந்தப் போலிச் சாமியார் பல போலி கார்களை உருவாக்கியிருக்கிறார். அவற்றின் அணிவகுப்புதான் இங்கே நீங்கள் பார்ப்பது…

Loading...
388
-
Rates : 0