ஆஹா ஓவியா மறுபடியும் வந்துட்டாய்யா வந்துட்டா : மகிழ்ச்சிக்கடலில் ரசிகர்கள்

Loading...

விஜய் டிவியில் கடந்த இரண்டு மாதங்களாக பிக்பாஸ் என்று அழைக்கப்படும் ரியாலிட்டி ஷோ நடந்து வருகின்றது. உலகநாயகன் கமல் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார் . இதில் தமிழ் நாட்டினை சேர்ந்த பிரபலங்கள் கலந்து ரகளை பண்ணி வருகின்றனர்.

சினேகனின் காமக் கூத்துகள், காயத்திரி ரகுராமின் அசிங்கமான வார்த்தை பிரயோகங்கள்,மற்றும் ஜூலியின் ஒப்பாரிகள் போன்றவற்றால் பிக்பாஸ் சுவாரசியத்தை இழந்து மல்லாக்க படுத்தபோது தனியொருவராக தூக்கி நிறுத்தியவர் நடிகை ஓவியா .

ஓவியாவின் ஓரப்பார்வை அழகும் , வெளிப்படையான தன்மையும் ஓவியாவுக்கு பார்வையாளர்கள் மத்தியில் நற் பெயரை பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மி என்னும் ஒரு படையை உருவாக்கி தமது ஆதரவை தெரிவித்து வந்தனர்.

பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த போது ஓவியா மற்றும் ஆரவ் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.ஓவியாவை கட்டியணைத்து ஆரவ் முத்தம் கொடுத்தார்.சில்மிஷம் புரிந்தார் . இதனால் ஆரவ் தன்னை உண்மையாகவே காதலிக்கின்றார் என்று ஓவியா நம்பினார்.ஆனால் இறுதியில் நான் உன்னை காதலிக்கவில்லை என்று கூறி ஆரவ் ஓவியாவை கழற்றி விட்டார்.

காதல் தோல்வியால் மனமுடைந்த ஓவியா நீச்சல் தடாகத்தில் தற்கொலைக்கு முயன்றார்.அதன் பின்னர் மன அழுத்தம் காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஓவியா ஹேர் ஸ்டைலை மாற்றி புது லுக்குடன் வலம் வந்தார்.மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்காக மருத்துவ சிகிச்சை செய்து கொண்டதாக செய்திகள் கசிந்தன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் ஓவியா டுவிட்டரில் ஆக்ட்டிவாக இருந்தார் .ரசிகர்களுடன் நல்ல தொடர்பினை பேணி வந்தார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் ஓவியா டுவிட்டர் பக்கமே வரவில்லை .ஓவியாவை காணாது ரசிகர்கள் ஏங்கி தவித்தனர் .

காதல் தோல்வி மற்றும் மனஅழுத்தம் ஆகியவற்றில் இருந்து வெளியே வந்துள்ள ஓவியா மறுபடியும் டுவிட்டர் பாவிக்க தொடங்கியுள்ளார்.பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு முதன்முறையாக ஓவியா நேற்று மாலை டுவிட்டரில் டுவிட்டியுள்ளார்.

ஓவியாவின் டுவிட்டினை பார்த்த ரசிகர்கள், ஆஹா ஓவியா வந்துட்டாய்யா வந்துட்டாய்யா என்று மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியுள்ளனராம். பல வருட சினிமா வாழ்க்கையில் கிடைக்காத பெயரும் புகழும் சில வாரங்களில் பிக்பாஸ் மூலம் ஓவியாவுக்கு கிடைத்துள்ளது.

Loading...
3062
-
0%
Rates : 1