ஆர்த்தி, ஜூலியை தொடர்ந்து கஞ்சா கருப்பு பிக்பாஸ்க்கு மீண்டும் வருகிறாரா

Loading...

நமக்குள் ஒளிந்திரும் கிராமத்தானை தன்னில் பிரதிபலிப்பவர் தான் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு. மதுரை பாஷையில் வெள்ளந்தியாக பேச கஞ்சா கருப்புவை விட்டால் ஆளில்லை என்றே சொல்லலாம்.

பிக் பாஸ் வீட்டிலிந்து வந்த பிறகு சந்தனத்தேவன், அருவா சண்ட, கிடா விருந்து உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில், 2009 ஆம் வருடத்தின், தமிழக அரசின் சிறந்த காமெடியனுக்கான விருது வழங்கப்பட்டதில், கூடுதல் உற்சாகமாகி உள்ளார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆர்த்தி, ஜூலி என ஒவ்வொருவராக மீண்டும் உள்ளே போகிறார்களே. அப்படி மீண்டும் செல்வாரா என்று கேட்டால், “ஆளைவிடுங்கப்பா சாமி.. அது வேற ஏரியா. கொஞ்சம் சூதானமாத்தான் நடந்துக்கணும். நமக்குலாம் அது செட்டாகதுப்பா” என சிம்பிளாக சொல்லிவிட்டாராம்.

ஆமாம்.. பிக்பாஸ் ஷோவே ஒரு ஸ்கிரிப்ட் தான். அதன்படிதான் அங்குள்ளவர்கள் நடிக்கிறார்களாமே என கேட்ட போது “அதெல்லாம் சும்மா சொல்றவங்க, எதுனா சொல்லுவாங்க பாஸ். அந்த வீட்டுக்குள்ளாற இருக்கிறவங்க அவங்கவங்க நடந்துக்கிறது எல்லாமே அவங்களா தீர்மானிக்கிறதுதான். ஸ்கிரிப்ட்டா இருந்தா, நடிப்பா இருந்தா அடுத்த செகன்ட்லயே வெளிய தெரிஞ்சிருமே என்று சொல்லிவிட்டாராம்.

Loading...
188
-
Rates : 0