பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்திய கமல்

Loading...

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசனை நிகழ்ச்சியில் பார்க்க ரசிகர்கள் அவ்வளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு அரசியல் கட்சிகள் பலரும் அரசுக்கு கண்டனங்களும் அனிதாவின் மரணத்திற்கு வருத்தத்தையும் பதிவு செய்து வருகின்றனர். கமல், மாணவி அனிதாவின் தற்கொலை மிகுந்த வேதனை அளிக்கிறது. நல்ல ஒரு மருத்துவரை நாம் இழந்துவிட்டோம்.

வரும் காலங்களில் இதுபோன்ற துயரங்கள் நிகழக்கூடாது.

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் கமல்ஹாசனும் அனிதா குடும்பத்தை நேரில் சந்திக்க முடிவு செய்ததால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Loading...
464
-
Rates : 0