பத்திரிக்கையாளராக மாறிய ஓவியா… உற்சாகத்தில் ஓவியா ஆர்மி

Loading...

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலத்தின் உச்சிக்கு சென்றார் நடிகை ஓவியா. தான் உண்மையாகவும், அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களை போல் போலியாக நடிக்காமல் இருந்ததால் தான் ஓவியா அனைவராலும் விரும்பப்பட்டார்.

தனக்கு தீங்கு நினைப்பவரையும் காயப்படுத்தக்கூடாது என்ற எண்ணம் அவரின் மீது மரியாதையை உண்டாக்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா, பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஓவியாவ விட்டா யாரு? என்ற படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பற்றி படத்தின் இயக்குநர் ராஜதுரை பேசினார்.

அதன்படி, படம் ஆரம்பிக்கும்போது ‘சீனி’னுதான் பெயர் வெச்சிருந்தோம். இப்பவும் படத்துக்கு ‘சீனி’தான் பெயர். ஆனா, படத்தின் பப்ளிசிட்டிக்காக `ஓவியாவ விட்டா யாரு?’ என்று தலைப்புக்கு முன் தயாரிப்பாளர் சேர்த்துள்ளார்.

இப்படத்தில், ஓவியா, ஒரு பத்திரிக்கையாளராக நடித்துள்ளார். செம கெத்தா, எதுக்கும் பயப்பட மாட்டாங்க. ஆரம்பத்துல இருந்து க்ளைமாக்ஸ் முழுக்க ஓவியா ராஜ்ஜியம்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட ஓவியாவின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், எம்.பி.ஏ படிச்ச ஒரு பையன், கவர்மென்ட் வேலைக்கே போகாம பிசினஸ் பண்ணி கோடீஸ்வரன் ஆகணும்னு நினைக்கிறான்.

இதுக்கு, பத்திரிகையாளரா இருக்கும் ஹீரோயின் எப்படி ஹெல்ப் பண்றாங்க அவர் கோடீஸ்வரர் ஆனாரா என்பதுதான் கதை என்று இயக்குநர் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

 
 

Loading...
222
-
Rates : 0