பிக்பாஸில் என்னதான் நடக்கிறது? ஓவியா வருவாரா

Loading...

பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் இயல்பாக இருப்பது போல தெரியவில்லை என்பதே பலரின் கருத்து. பல விதமாய் முயற்சி செய்து காண்பிக்கப்பட்டாலும் ஓவியா இருந்தது போல இல்லை என்பது தான் அனைவரின் ஒருமித்த கருத்தும்.

அதற்கேற்றார் போல தான், சர்ச்சையாகி வெளியே சென்ற ஜூலி, ஆர்த்தி என இருவர் உள்ளே வந்த போது பின்னர் இப்போது சக்தி வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று நடந்த எபிசோடில் ஆரவ்வை மர்ம நபர்கள் இழுத்து செல்லும் போது ஜூலி பதறி கத்தினார்.

நடப்பது என்ன என ஒன்றும் புரியாத இவர்கள் குழப்பிப்போயிருக்கிறார்கள். பக்கம் ஜூலி, சுஜா வார்த்தை மோதல் நடக்கிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து வந்த ஆரவ் வரும் வாரங்கள் இன்னும் பல விசயங்கள் இருக்கும் என சொல்கிறார்.

உடனே ஆர்த்தி என்ன ஓவியா வருகிறார் என கேட்கிறார். நேற்று பல இடங்களில் சுஜா, ஜூலியின் செய்கையால் கோபமாகி பேசியது தெரிந்தது. இப்போது வந்துள்ள பிரமோவில் அதை வலுப்படுத்தும் விதமாக இருப்பதால் வரும் வாரங்களில் என்ன நடக்கப்போகிறதோ?

ஓவியா மீது ஆர்த்தியும் ஒரு கண்ணாக இருக்கிறார். பேசும் போதெல்லாம் தெரிகிறது. ஓவியா வந்தால் ரசிகர்கள் மீண்டும் விழித்துவிடுவார்கள். கொண்டாடுவார்கள்.

Loading...
125
-
Rates : 0