அவர் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டார்! பிரபல நடிகரை பற்றி கங்கனா பேட்டி

Loading...

ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் செண்பா கேரக்டர் மூலம் தமிழுக்கு வந்தவர் கங்கனா. ஹிந்தியில் பிரபல நடிகையான இவர் 3 தேசிய விருதுகளை வாங்கியிருக்கிறார்.

நடிகர் ஹிரிதிக் ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக பேட்டி கொடுத்துள்ளார். இதில் அவர், நானும் அவரும் காதலித்தோம். அவருக்கு மனைவி இருப்பதால் என்னை திருமணம் செய்ய மறுத்தார்.

வெளியே தெரியாமல் காதலை தொடரலாம் என கூறினார். திருமணம் இல்லாத காதல் அர்த்தமற்றது என அவரை தவிர்த்துவிட்டேன். பின்னர் அவர் என்னிடம் தன் மனைவியை விவாகரத்து செய்யபோகிறேன். பின்னர் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறினார்.

அப்போது வேறு நடிகையுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக சர்ச்சைகள் வந்தது. இது பற்றி கேட்டபோது என்னை மறந்து விடு என்றார். நான் காதல் தோல்வியில் இருந்தாலும் குயின் படம் வெளியாகி வெற்றிபெற்றது.

எனக்கு போன் மூலம் வாழ்த்துக்கள் சொன்னார். காதலை பற்றி பேசிய போது, படம் வெற்றி பெற்ற கர்வத்தில் பேசுகிறாயா என்று கேட்டார். அதன் பிறகு தான் எங்கள் காதலை உலகுக்கு சொன்னேன்.

இதனால் பல மிரட்டல்கள் வந்தது. நான் எழுதிய கடிதங்கள், போட்டோ, வீடியோ என எல்லாவற்றையும் வெளியிட்டார்கள். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த பயனும் இல்லை. நடிகைகே இப்படி எனில் மற்ற பெண்களுக்கு என்ன நிலை என கேள்விகேட்டுள்ளார்.

Loading...