முகப்பருக்களை அடியோடு ஒழிக்க

Loading...

இலவங்கப்பட்டை மற்றும் ஜாதிக்காயை பொடி செய்து முகத்தில் தடவி வந்தால், முகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய முடியும். ஜாதிக்காய் கொலாஜன் உற்பத்தியை அதிகப்படுத்தோடு உடலின் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

லவங்கப்பட்டை முகத்தில் உண்டாக்கும் கரும்புள்ளிகளைப் போக்குகிறது. ஒரு ஸ்பூன் இலவங்கப்பொடி, ஒரு ஸ்பூன் ஜாதிக்காய் பொடியுடன் இரண்டு ஸ்பூன் தேனைக் கலந்து முகத்தில் பூச வேண்டும். அரைமணி நேரம் நன்கு காயவிட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும்.

சோளமாவு

சோளமாவு நல்ல ஸ்கிரப் ஆகப் பயன்படுகிறது. அது முகத்தில் உள்ள எண்ணெய் படலத்தைப் போக்கி, முகத்தை புத்துணர்ச்சியாகவும் பொலிவுடனும் மாற்றுகிறது. சோளமாவை சில துளிகள் வெந்நீரை விட்டு, பேஸ்ட்டாக்கிக் கொள்ளவும். அதனுடன் சில துளிகள் ஆலிவ் ஆயில் சேர்த்து மூக்கு மற்றும் முகப்பரு உள்ள இடங்களில் பூசுங்கள். பின்னர் 20 முதல் 25 நிமிடங்கள் வரை அதனை காயவிட்ட பின், வெதுவெதுபபான நீரால் முகத்தைக் கழுவ முகம் பளபளவென மின்னும்.

வெண்ணெய்

வெண்ணெய் சருமத்துக்கு ஊட்டமளிப்பதோடு, சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்கும். தினமும் சிறிதளவு வெண்ணெயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் சருமம் பொன்னைப் போல் மின்னுவதை உங்களால் உணர முடியும். முட்டையின் வெள்ளைக்கருவோடு சிறிது வெண்ணெயும் எலுமிச்சை சாறும் கலந்து முகத்தில் தடவி வர முகம் பளபளக்கும்.

கிவி பழம்

கிவி பழம் அதிக அளவு நீர்ச்சத்து உடையது. ஊட்டச்சத்து மிக்கதோடு சருமத்தைப் பாதகாப்பதிலும் சிறந்து விளங்குகிறது. வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று கிவி பழத்தை முகத்தில் தடவி வந்தால், உங்கள் முகத்தில் முகப்பருவை நெருங்கவே விடாது.

Loading...
706
-
100%
Rates : 2