அதிக எடை, அதிக நேரம் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்பவர்களுக்கு வரும் முதுகு வலியை போக்கும் உடற்பயிற்சியை பார்க்கலாம். முதுகெலும்பு வலுவடைய செய்யும் ஆங்கிள் பயிற்சி அதிக எடை, அதிக நேரம் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வபர்களுக்கு முதுகு வலி பிரச்சனை இருக்கும். அதிக நேரம் நின்றிருத்தால் முதுகு வலிக்க ஆரம்பிக்கும். இவர்கள் இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து 20 நிமிடங்கள் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். இந்த பயிற்சியுடன் சில வார்ம்அப் பயிற்சிகளையும் செய்து வரவேண்டும். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களுக்கு நடுவில் அரை அடி இடைவெளி விட்டு, நேராக நின்று, இரு கைகளையும் மேலே உயர்த்தி, உள்ளங்கை மேலே தெரிவது போல் கோத்துப்பிடித்து, பொறுமையாக இடது பக்கம் சாய வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவேண்டும். இதே போல் வலது பக்கமும் சாய வேண்டும். ஆரம்பத்தில் இரு பக்கமும் 5 முதல் 7 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். ஒரு மாதத்தில் நல்ல பலன் தெரிவதை காணலாம். பலன்கள்: முதுகுத்தண்டில் இறுக்கம் குறையும். மேலும், இடுப்பில் இருந்து மார்பு வரை உள்ள எலும்புகள் விரிவடைவதால், இடுப்புப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும். முதுகெலும்பு வலுவடையும்.

Loading...

உடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையுமா?

 
உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறும். ஆனால் தொப்பை குறையுமா? பலரும் உடற்பயிற்சி தொப்பையை குறைக்கும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உடற்பயிற்சி செய்தால் நன்றாக பசியெடுக்கும், அதனால் அதிகம் சாப்பிடுவார்கள். எனவே எடை குறைப்பது சாத்தியமான ஒன்றல்ல.

உடற்பயிற்சி ஜீரண மண்டலத்தை தூண்டி விடுகிறது. இதனால் நன்கு பசித்தால் ஆரோக்கியம் கூடுவதாகவே பொருள். சந்தேகமில்லாமல் உடற்பயிற்சி நல்ல விளைவுகளை தருகிறது. அரைமணி நேர உடற்பயிற்சி உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனநலத்திற்கும் நல்லதுதான்.

தொப்பை இதற்கெல்லாம் மசிந்து விடுமா என்ன? உடற்பயிற்சி செய்து ஆயிரம் கலோரி எரித்துவிட்டு இரண்டாயிரம் கலோரி உள்ளே தள்ளினால் வெளியே தள்ளிய வயிறு உள்ளே போகுமா? வாக்கிங்,உடற்பயிற்சி இதையெல்லாம் பலர் கடனுக்கு செய்கிறார்கள். இன்று மருத்துவர் சொன்னார் என்பதற்காக மட்டுமே செய்கிறார்கள்.

வாயைக்கட்டினால் வயிற்றைக் கட்டலாம் என்று சொல்வார்கள். பெரும்பாலானவர்களுக்கு இது முடியாமல் போய்விடுகிறது. உணவை உள்ளே தள்ளுவதில் விழிப்புணர்வு இல்லை என்பதே சரி.நாக்கை அடக்கினால் மட்டுமே தொப்பையையும்,பருமனையும் கட்டுப்படுத்த முடியும்.

உடலுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்களும் போதுமான அளவு சேர்ந்து ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும்.இன்றைய குழந்தைகளும் அதிக பருமனாகி வருகிறார்கள்.அவர்களுக்கான உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமில்லாமல் இருப்பதே காரணம்.

உடற்பயிற்சி உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் தொப்பையை கரைத்துவிடும் என்பதற்கான உத்தரவாதம் தருவது சாத்தியமல்ல! உணவு முறையில் மாற்றம் கொண்டுவருவதே ஒரே வழி.

 

Loading...