கோகுல் இல்லை, பிக்பாஸ் கம்பீர குரலுக்கு உண்மையான சொந்தகாரர் இவர்தான்..

Loading...

பிரபல டிவியில் கடந்த 100 நாட்களாக மக்களை கட்டி போட்டு வைத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமையுடன் முடிவடைந்தது.இதில் ஆரவ் பட்டம் வென்றார். சினேகன் இரண்டாம் இடம் பிடித்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியல் பல விஷயங்கள் மக்கள் மறக்க முடியாதபடி உள்ளது.

 

பிக்பாசின் குரலை யாரும் மறக்க முடியாது. கன்பஷன் ரூமுக்கு வாங்க எனும் அந்த கம்பீர குரல் இன்னும் மக்கள் மனதில் ஒலித்து கொண்டே இருக்கிறது.இந்த கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் பிரபல டிவியின் டப்பிங் ஆர்டிஸ்டான கோபி நாயர் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர் மறுத்து அந்த குரல் என்னுடையது கிடையாது என்றார்.

தற்போது அந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது தெரியவந்துள்ளது.அவர் நடிகரும், தொகுப்பாளருமான ரிஷி என்பது தெரியவந்துள்ளது. இவர் தனியார் தொலைகாட்சியில் டீலா நோ டீலா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதனை தயாரித்து வழங்கியது என்டோமல் நிறுவனம்.

இந்த நிறுவனம்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தயாரித்தது. இந்த நிகழ்ச்சிகளை நல்ல முறையில் தொகுத்து வழங்கியதால் என்டோமால் நிறுவனம் தன்னுடைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுக்கும் வாய்ப்பை வழங்கியது.அவரும் அதன்படி கம்பீரமாக பேசினார். அவர் பேசியதை சற்று நவீன தொழில்நுட்பமான வாய்ஸ் ப்ராசஸிங் மூலம் மெருகேற்றி ஒழிக்கவிட்டுள்ளார்கள்.

 

பேசியது ரிஷிதான் என்றாலும் என்ன பேச வேண்டும் என்று தயாரித்து எழுதி கொடுத்தது எல்லாமே பிக்பாசை தயாரித்த என்டோமால் நிறுவனத்தினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
1534
-
Rates : 0